சென்னையில் ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைத்த வழக்கு தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்
சென்னை எம்.எம்.டி.ஏ. மாத்தூர் 3வது பிரதான சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கஞ்சா போதையில் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைத்த வழக்கு தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து M2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “ MMDA மாத்தூர் 3ஆவது பிரதான சாலை அருகில் நிறுத்தி வைத்திருந்த 10 ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் உடைத்து உள்ளனர். விசாரணையில், கடந்த 28ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் பெரிய மாத்தூரை சேர்ந்த அன்பு என்பவரை மாத்தூர் பகுதியை சேர்ந்த முகேஷ், ஆகாஷ், வினோத், திருமால் ஆகியோர் தாக்கியுள்ளனர். அதற்கு பதில் தாக்குதல் நடத்த வந்த அன்புவின் நண்பர்களான பிரகாஷ், கிருஷ்ணா, சிவா, லாரன்ஸ் ஆகியோர் அன்புவை தாக்கிய நபர்கள் இல்லாத காரணத்தினால் அவர்கள் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தினர்
undefined
Bank Loans: மனைவி வேண்டுமா? தவணையை செலுத்திவிட்டு கூட்டீட்டு போ; சேலத்தில் தனியார் வங்கி அடாவடி
மேலும் இச்சம்பவத்திற்கு கஞ்சா போதை காரணம் இல்லை என்றும் இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்றும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து இரண்டு நபர்களை கைது செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.