LijoMol Jose : ஜெய் பீம் ஹீரோயினா இது? புது ஹேர்ஸ்டைல் வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிய லிஜோ மோல்

First Published Apr 16, 2024, 3:21 PM IST

ஜெய் பீம், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை லிஜோ மோல் ஜோசின் நியூ லுக் புகைப்படங்கள் வைரலாகிறது.

மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படம் மூலம் அறிமுகமானவர் லிஜோ மோல் ஜோஸ், இதையடுத்து ஹனி பீ என்கிற மலையாள படத்தில் மேக்கப் ஆர்டிஸ்டாக நடித்திருந்தார். பின்னர் மம்முட்டி உடன் ஸ்டிரீட் லைட் படத்தில் நடித்திருந்தார் லிஜோ மோல்.

இதையடுத்து தமிழில் எண்ட்ரி கொடுத்த லிஜோ மோல், சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிட் ஆனதை தொடர்ந்து நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு லிஜோ மோலுக்கு கிடைத்தது.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஜெய் பீம் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக செங்கேனி என்கிற கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லிஜோ மோல். ஞானவேல் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

இதையும் படியுங்கள்... Raiza Wilson : சிங்கள் பீஸ் ஆடையில்.. தொடையழகி ரம்பாவுக்கு போட்டியான ரைசா வில்சன் - ஹாட் புகைப்படங்கள் இதோ!

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை லிஜோ மோலுக்கு 5 விருதுகளும் கிடைத்தன. தற்போது தமிழில் அன்னபூரணி, காதல் என்பது பொதுவுடைமை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஷு பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

அதில் ஆண்கள் போல் ஹேர் கட்டிங் செய்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு புது லுக்கில் காட்சியளிக்கிறார் லிஜோ மோல். இதைப்பார்த்த ரசிகர்கள் லிஜோ மோலா இது என ஷாக் ஆகிப்போய் உள்ளனர். அவர் படத்துக்காக இந்த லுக் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது என்ன படம் என்பதை சர்பரைஸாக வைத்துள்ளார் லிஜோமோல்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் கோலோச்சும் கேரளத்து பியூட்டி... நடிகை மாளவிகா மோகனனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

click me!