ஜாபர் சாதிக்கிற்கு சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது.! உயிருக்கு ஆபத்து! சி.வி.சண்முகம் பகீர்.!

First Published Mar 5, 2024, 7:44 AM IST

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

CV Shanmugam

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தமிழகம் முழுவதும் அதிமுக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. விழுப்புரம் நகராட்சித் திடலில் அம்மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான சி.வி.சண்முகம் எம்.பி. பேசுகையில்: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்க கூடிய மருந்து மாத்திரைகளில் போதைப் பொருள்களாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதை சுகாதாரத்துறை அமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டு ரோட்டில் டிரௌசர் மாட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். 

Drug Smuggling


இன்றைக்கு தமிழகம் பஞ்சாப் மாநிலத்தை போல மாறிக்கொண்டு வருகிறது. பஞ்சாப்பின் மிகப்பெரிய பிரச்சினை போதைப் பொருட்கள்தான். திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் போதை வஸ்துக்கள், கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

Jaffer Sadiq

போதை மருந்து கடத்தியதாக கூறப்படும் ஜாபர் சாதிக் திமுகவின் முக்கிய நிர்வாகி. இவருக்கு அமைச்சர் உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரம் அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்திருக்கிறது. போதைப் பொருள் கடத்தலிலிருந்து வந்த வருமானத்தில் ஜாபர் சாதிக் உதயநிதி ஸ்டாலின் நடத்துகிற அறக்கட்டளைக்கு நிதியுதவி அளித்துள்ளார். திமுக சென்னை மாவட்டச் செயலாளர் மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று என்.சி.பி. சோதனை செய்கிறது. 

DMK


ரூ.2,000 கோடிக்கு போதைப் பொருள் கடத்தி இருக்கிறார். இது அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். ஜாபர் சாதிக்கிற்கு, சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது. தற்கொலை என்று சொல்லி, இஸ்லாமிய சமுதாயத்தில் சாதிக் பாஷா உயிரிழந்தார். அவரை அடக்கம் தான் செய்ய வேண்டும். ஆனால் சாதிக் பாஷாவை அவசர அவசரமாக அவரது மனைவியின் ஒப்புதலைக் கூட பெறாமல், உடனடியாக எரியூட்டினார்கள். இன்றைக்கு சாதிக் பாஷா மனைவி காவல்துறையில் அது கொலை, விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். எனவே, ஜாபர் சாதிக் உயிரோடு கிடைக்க வேண்டும். அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றார். 

click me!