பிரமாண்டமாக நடந்து முடிந்த ஈஷா மகா சிவராத்திரி... வெளியானது பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!!

First Published Feb 19, 2023, 9:34 PM IST

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி மிக பிரம்மாணடமாக நடைபெற்ற நிலையில் இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக்கொண்டார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளையின் பாரம்பரிய கலாச்சார மகாசிவராத்திரி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். சிவராத்திரி அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, மறுநாள் காலை 6.00 மணிக்கு நிறைவடைந்தது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரியையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஈஷா யோகா மையத்துக்கு வந்தார். அவரை சத்குரு மாலை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு ஈஷா யோகா மையத்தை சுற்றி காட்டி யோகா மையம் மற்றும் அங்குள்ள லிங்கங்கள் பற்றிய விபரங்களை எடுத்து கூறினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான ஆற்றல் வடிவமான தியானலிங்கத்தில் சத்குரு நடத்திய பஞ்ச பூத கிரியாவில் பங்கேற்றார். பின்னர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு யோகேஷ்வர் லிங்கத்தில் தீர்த்தம் ஊற்றி அபிஷேகம் செய்தார். உலகம் முழுவதும் யோகா பரவியதன் அடையாளமாக ஆதியோகியில் மகாயோக யாகத்தையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நடத்தினார். 

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஆதியோகியின் முன்னிலையில் மகாசிவராத்திரியின் புனிதமான தருணத்தில் நான் இங்கு வந்திருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன். சிவபெருமான் அனைவருக்குமான தெய்வம் எனறார். மேலும் இந்த மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் ராம் மிரியாலா தனது இசையால் பார்வையாளர்களை மயக்கினார். பல்வேறு கலைஞர்கள் தங்களது ஆன்மிக இசையால் மக்களை கவர்ந்தனர்.

சத்குரு, ஓம் நம சிவா என்பது ஒரு அற்புதமான ஒலி வடிவியல். ஒருவர் அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், வாழ்க்கையில் உங்களைப் பிணைக்கும் எல்லாவற்றிலிருந்தும் அது உங்களைப் பிரித்துவிடும். அது உள்நிலையில் நேரடியான பாதை உள்ளது. மகிழ்ச்சியான இருப்புக்கு வழிவகுக்கும் வளர்ச்சியை நோக்கி, அதனால் வாழ்க்கையின் செயல்முறை உங்கள் அனுபவத்தில் ஒரு சுமையாக இருக்காது என்றார். 

ராஜஸ்தானி நாட்டுப்புற பாடகர் மாமே கான், விருது பெற்ற சிதார் இசைக்கலைஞர் நீலாத்ரி குமார், பாடகர் ராம் மிரியாலா, பின்னணி பாடகர்கள் வேல்முருகன், மங்கலி, குடலே கான் மற்றும் பெங்காலி நாட்டுப்புற பாடகி அனன்யா சக்ரவர்த்தி போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல கலைஞர்கள் ஆன்மிக நிகழ்வின் போது நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள் நெருப்பு நடனமாடி காட்டினர். இது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. ஆதியோகி சிவம் சிலை முன்பு ஆடப்பட்ட இந்த நெருப்பு நடனத்தின் போது நெருப்பு சுற்றப்பட்டு வளையம் போன்றதொரு அமைப்பு உருவாக்கப்பட்டது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

click me!