Darshan Anju Kurian : மலையாள நடிகையை ரகசியமாக திருமணம் செய்துகொண்டாரா கனா பட ஹீரோ தர்ஷன்? லீக்கான போட்டோஸ்

First Published Apr 12, 2024, 10:17 AM IST

கனா படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனும், மலையாள நடிகை அஞ்சு குரியனும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த கனா படம் மூலம் அறிமுகமானவர் தர்ஷன். இதையடுத்து தும்பா என்கிற படத்தில் ஹீரோவாக நடித்த இவர், அடுத்ததாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறி அவர் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் பிசியான தர்ஷன், அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வரும் தர்ஷன், நடிகை அஞ்சு குரியனை திருமணம் செய்துகொண்டதாக குறிப்பிட்டு புகைப்படங்கள் சில வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. அதில் தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் இருவருமே திருமண கோலத்தில் மாலையும், கழுத்துமாக அமர்ந்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... GOAT : கோட் பட போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள 2000ம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா?

அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக குறிப்பிட்டு இந்த புகைப்படங்கள் வைரலாக பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் அது விளம்பரத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படமாம். தர்ஷன் - அஞ்சு குரியன் இருவரும் லலிதா ஜுவல்லரி விளம்பரத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அதன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் லீக் ஆகி செம்ம வைரலாக பரவி வருகிறது.

ஒரு சிலரோ அவர்கள் உண்மையிலேயே திருமணம் செய்துகொண்டார்கள் என நினைத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தர்ஷன் உடன் இந்த விளம்பரத்தில் ஜோடியாக நடித்துள்ள மலையாள நடிகை அஞ்சு குரியன், தமிழில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Rajamouli Dance : திடீரென பிரபுதேவா-வாக மாறி டாப் கிளாஸாக டான்ஸ் ஆடிய இயக்குனர் ராஜமவுலி - வைரல் வீடியோ இதோ

click me!