Camphor : என்னங்க சொல்றீங்க..கற்பூர வாசனையை சுவாசித்தால் நல்லதா.! உண்மையை தெரிஞ்சுக்கலாம் வாங்க!

First Published Apr 12, 2024, 8:00 AM IST

உங்களுக்கு தெரியுமா.. கற்பூர வாசனையை சுவாசித்தால் உடலில் பலவித பிரச்சினைகள் நீங்குமாம்..அது உண்மையா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

பொதுவாகவே, கற்பூரம் கடவுள் வழிபாட்டில் தான் பயன்படுத்தப்படும். மேலும், கற்பூரத்தை எரிக்கும் போது அதிலிருந்து ஒரு நல்ல வாசனை  வரும். ஆனால் கற்பூரத்தை வழிபாட்டில் பயன்படுத்துவதை தவிர, பல வகையான உடல்நலக் கோளாறுகள் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

ஆம், எப்படியெனில் கற்பூரத்திலிருந்து வரும் வாசனை பல உடல்நல பிரச்சினைகளை நீக்க உதவுமாம். தினமும் கற்பூர வாசனையை சுவாசித்தால் மன அழுத்தம் குறையும், பதட்டம் நீங்கும். காரணம் இதிலிருந்து வரும் வாசனை உங்கள் மனதை அமைதியாக்குகிறது. இதனால் உங்களை அறியாமலேயே உங்கள் முகத்தில் ஒரு புன்னகை வரும்.

அதுமட்டுமின்றி, கற்பூர வாசனையை சுவாசித்தால் மேலும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் குறையுமாம். தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் உடனே நிவாரணம் கிடைக்க வேண்மெனில், கற்பூர வாசனையை சுவாசியுங்கள்.

அதுபோல, கற்பூரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை கிருமிகளை விலக்கி வைக்கிறது. எனவே, வீட்டை சுத்தம் செய்யும் போது கற்பூர பொடியை பயன்படுத்துங்கள், பாக்டீரியா வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் வீட்டில் துர்நாற்றம் வீசாது.

மேலும், கற்பூரத்தை பொடியாக்கி, அதை எண்ணெயில் கலந்து உடலில் தடவினால் வலி மற்றும் அரிப்பு குறையும். அதுமட்டுமின்றி, தசைகள் மற்றும் மூட்டுகளில் உள்ள வலியையும் குறைக்கும். இருப்பினும், உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் இருந்தால் கவனமாக இருங்கள்.

click me!