ரூ.6,000 கோடி சொத்து.. 4 சூப்பர் ஸ்டார்கள்.. 5 ஸ்டுடியோக்கள்.. இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம் இதுதான்!

First Published Feb 12, 2024, 10:24 AM IST

மெகா குடும்பம் என்று அழைக்கப்படும் அல்லு-கொனிடேலா குடும்பம், இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான மற்றும் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். 

Allu Konidela Family Net Worth

இந்திய திரைப்படத்துறையில் எத்தனை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பெரும் புகழும் அங்கீகாரமும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். இப்படி சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் சிலர்,  சினிமா உலகில் தங்களின் சொந்த சாம்ராஜ்யத்தை உருவாக்குகின்றனர். கபூர்கள், சோப்ராக்கள் மற்றும் அக்கினேனிகள் போன்ற சில குடும்பங்களை இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மற்றும் பணக்கார திரைப்படக் குடும்பங்களுக்கு உதாரணமாக சொல்லலாம்.
 

சரி, நாட்டின் பணக்கார சினிமா குடும்பம் எது தெரியுமா? அது தெலுங்கு திரையுலகை சேர்ந்த குடும்பம் தான். மெகா குடும்பம் என்று அழைக்கப்படும் அல்லு-கொனிடேலா குடும்பம், இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான மற்றும் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். 

இந்த தெலுங்கு சினிமா குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட அல்லு ராமலிங்கய்யா இந்த மெகா குடும்பம் உருவானது.இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், அவர்களில் அரவிந்த் ராமலிங்கய்யா தயாரிப்பாளராக மாறினார். இவரின் மகள் சிரஞ்சீவியை மணந்தார். இந்திய திரையுலகின் மெகா ஸ்டார்களில் ஒருவராக அவர் உருவெடுத்தார். 

மேலும் இந்த மெகா குடும்பத்தில் ராம் சரண், அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், நாகேந்திர பாபு, வருண் தேஜ், சாய் தரம் தேஜ் மற்றும் பலர் உள்ளனர். அவர்கள் கபூர் குடும்பத்தை  விட அதிக சொத்து வைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அல்லு-கொனிடேலா குடும்பத்தின் பணக்கார உறுப்பினர்களாக சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் கருதப்படுகின்றனர்.. மேலும் அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜுன் பங்களிப்புடன் மெகா குடும்பத்தின் நிகர மதிப்பு ரூ.6,000 கோடி என்று கூறப்படுகிறது. இந்த குடும்பம் கீதா ஆர்ட்ஸ், அஞ்சனா புரொடக்ஷன்ஸ், பவன் கல்யாண், கிரியேட்டிவ் ஒர்க்ஸ், கொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி, அல்லு ஸ்டுடியோ போன்ற தயாரிப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது.

சிரஞ்சீவி ஒரு மெகாஸ்டார் என்பதை தாண்டி, இந்திய அரசின் மாநில மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் மத்திய அமைச்சராக இருந்த அரசியல்வாதியும் ஆவார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர், தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக இருந்தும் பிரச்சாரம் செய்தார். 2014 முதல், அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார், மேலும் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த அவரது பதவிக்காலமும் 2018 இல் முடிவடைந்தது.

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக சிரஞ்சீவி கருதப்படுகிறார். இந்தியாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் உள்ளனர். அதே போல் பவன் கல்யாணுக்கும் தெலுங்கு திரையுலகிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இப்படி இந்த மெகா குடும்பத்தில் 4 சூப்பர்ஸ்டார்கள் உள்ளனர்.

இவர்களை தவிர இந்த மெகா குடும்பத்தில் பல நடிகர்களும், தயாரிப்பாளர்களும் உள்ளனர். RRR, புஷ்பா, சைரா நரசிம்ம ரெட்டி, மகதீரா, இந்திரா மற்றும் பல போன்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி உள்ளது. 

click me!