50 கோடி சம்பளம்; ரோல்ஸ் ராய்ஸ் கார் என ராஜ வாழ்க்கை வாழும் இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

First Published Apr 17, 2024, 12:16 PM IST

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல்வேறு பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

பிரம்மாண்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருப்பவர் ஷங்கர். டிப்ளமோ படித்த ஷங்கருக்கு, சினிமா மீது அதீத ஆர்வம் இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்த ஷங்கர், ஒருமுறை அவரது குழுவினருடன் சேர்ந்து போட்ட டிராமாவை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பார்த்திருக்கிறார். அப்போது ஷங்கரின் திறமையை பார்த்து வியந்த எஸ்.ஏ.சி, தன்னுடைய படங்களில் பணியாற்ற அழைத்தார். இதையடுத்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷங்கர், கடந்த 1993-ம் ஆண்டு இயக்குனராக எண்ட்ரி கொடுத்தார்.

ஷங்கர் இயக்கத்தில் முதன்முதலில் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். அர்ஜுன், மதுபாலா ஹீரோ, ஹீரோயினாக நடித்து வெளிவந்த இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த இயக்குனர் ஷங்கர், அடுத்த படத்திற்காக பிரபுதேவா உடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் கூட்டணியில் காதலன் திரைப்படம் உருவானது. இப்படத்திலும் தன்னுடைய கற்பனையால் பிரம்மாண்டத்தை புகுத்தி வெற்றிவாகை சூடினார் ஷங்கர்.

அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ஷங்கருக்கு மூன்றாவதாக கமல்ஹாசனின் இந்தியன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1996-ம் ஆண்டு வெளியான இப்படம் அந்த சமயத்திலேயே பான் இந்தியா அளவில் இண்டஸ்ரி ஹிட் அடித்தது. பின்னர் ஜீன்ஸ், முதல்வன், அந்நியன் என வரிசையாக ஹிட் கொடுத்த ஷங்கருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் முதன்முறையாக சிவாஜி படத்தில் இணைந்து பணியாற்றினர். 

ரஜினியை வைத்து ஒரு பிரம்மாண்ட கமர்ஷியல் படமாக சிவாஜி படத்தை செதுக்கிய ஷங்கர் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். ஷங்கரின் மேக்கிங்கால் இம்பிரஸ் ஆன ரஜினி, மீண்டும் அவருடன் இணைந்து எந்திரன் படத்தில் நடித்தார். ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை இயக்கி இந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்தினார் ஷங்கர். இதையடுத்து விஜய்யை வைத்து நண்பன், விக்ரம் நடித்த ஐ, ரஜினியின் 2.0 போன்ற படங்களையும் ஷங்கர் இயக்கினார்.

இதையும் படியுங்கள்... Aishwarya : ஜோதிகாவை போல் பிட்னஸில் வெறித்தனமாக இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - வைரலாகும் ஒர்க் அவுட் வீடியோ

தற்போது அவர் இயக்கத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என 2 பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் இந்தியன் 2 படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. அதேபோல் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் கேம் சேஞ்சர் படமும் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அப்படமும் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.

இப்படி படத்துக்கு படம் பிரம்மாண்டத்தை புகுத்தி பிரம்மிப்பை ஏற்படுத்தும் இயக்குனர் ஷங்கர் நிஜத்தில் மிகவும் எளிமை தானாம். சிம்பிளான வாழ்க்கையை தான் விரும்புவாராம். தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலிலும் ஷங்கர் டாப்பில் உள்ளார். இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களுக்காக அவருக்கு ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.150 கோடி இருக்குமாம்.

இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ஷங்கர். இவர் தயாரிப்பில் வெளிவந்த காதல், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, கல்லூரி, வெயில், அனந்தபுரத்து வீடு, ஈரம் ஆகிய படங்கள் ஷங்கருக்கு கோடிக்கணக்கில் லாபத்தை கொடுத்துள்ளன.

ஷங்கருக்கு சொந்தமாக சென்னை மற்றும் மும்பையில் சொகுசு பங்களா உள்ளது. இதில் நவி மும்பையில் உள்ள அவரின் பிரம்மாண்ட வீடு மட்டோட மதிப்பு மட்டும் ரூ.6 கோடி இருக்குமாம். இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர். விஜய்யை போல் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் ஷங்கரிடமும் உள்ளது. அதன் மதிப்பு ரூ.3.65 கோடி இருக்குமாம். இந்த காருக்கு பல லட்சம் செலவளித்து ஸ்பெஷல் நம்பர் பிளேட் வாங்கினாராம் ஷங்கர். இதுதவிர பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களும் ஷங்கரிம் உள்ளது.

இதையும் படியுங்கள்... Thangalaan : தங்கலான் படத்துக்காக இம்புட்டு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாரா விக்ரம்! மிரள வைக்கும் மேக்கிங் Video

click me!