சென்னையில் இந்த பகுதியில் 106 டிகிரி வெயில் இருக்குமாம்! எந்த மாவட்டத்தில் மழை ஊத்தப்போகுது!பிரதீப் ஜான் தகவல்

First Published May 5, 2024, 12:51 PM IST

சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

Heatwave in Tamilnadu

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கோடை வெயில் நாள்தோறும் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. ஒரு புறம் கோடை வெயில் கொளுத்துவதோடு மட்டுமல்லாமல் மறுபுறம் வெப்ப அலையும் நெருப்பாக வீசி வருகிறது. 

Tamilnadu Rain

இந்நிலையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. அதன்படி நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

Tamilnadu Weatherman

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை மீனம்பாக்கத்தில்  105.8°Fவெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. சேலம் ஏற்காடு, வால்பாறை, கொடைக்கானல், தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: Tamilnadu Heavy Rain Alert: இந்த 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்குப்போகுதாம்.!

High heat in Vellore

கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் பதிவாகி வரும் கரூரில் 50- 50 சான்ஸ் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு மற்றும் கரூரை விட இன்றைய தினம் வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். 

click me!