
ஏற்கனவே இந்த கோடை விடுமுறைக்கு வெளியான திரைப்படங்களை தனது ரிவ்யூ மூலம் வறுத்து எடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் கவின் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ஸ்டார் திரைப்படத்தையும் பெரிய அளவில் விமர்சித்துள்ளார். அதுவும் நடிகர் கவின் மற்றும் இயக்குனர் இளன் ஆகிய இருவரையும் வறுத்தெடுத்துள்ளார்.
அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் ஏற்கனவே பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி, அதன் பிறகு அவர் அந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், பிரபல நடிகர் கவின் இந்த ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
Kalvan OTT Release: ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் OTT ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
இருப்பினும் ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தில் "நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு தோற்றுப் போன ஒருவரின் மகன், நடிகனாக வேண்டுமென்று ஆசைப்படுகிறார். ஆனால் அதற்காக ஏன் அவர் பாம்பை வரை சென்று நடிப்புக் கல்லூரியில் பயில்கிறார் என்பது தெரியவில்லை. ஏன் தமிழகத்தில் நல்ல பயிற்சி பள்ளிகளே இல்லையா?"
"முதல் பாதியில் ஒரு காதலியடனும், இரண்டாம் பாதியில் ஒரு காதலியுடனும் கவின் பயணித்து வருகிறார். அவர்கள் ஏன் இந்த கதைக்குள் வந்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களுடைய காட்சிகளை நீக்கினாலும் படம் அப்படியே தான் இருக்கும். அறிமுக இயக்குனர் ஈலன் இந்த படத்தை முற்றிலும் சொதப்பி வைத்துள்ளார்".
டாடா படத்தை பார்த்து கவினுக்கு நல்ல கதை கேட்கும் திறன் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அதனை ஏமாற்றும் வகையில் ஒன்றுக்கும் ஆகாத ஒரு கதையில் கவின் நடித்து முடித்துள்ளார்" என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை முன்வைக்க, வழக்கம் போல இணையத்தில் அவருக்கு எதிராக வசைபாடிவருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.