KGF-3 Update: கேஜிஎப் 3ல் வில்லனாகும் பேமஸ் பாலிவுட் நடிகர்? அல்ட்ரா லெவல் கூட்டணி..வெளியான செம்ம மாஸ் அப்டேட்

First Published May 30, 2022, 11:16 AM IST

KGF-3 Update: கேஜிஎப் 3 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

KGF3- Hrithik Roshan

யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று தந்தது. இதையடுத்து, படத்தின் இரண்டாம் பாகம் எப்போதும் வரும், என்று காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 

KGF-3

கடந்த மாதம் வெளியான இந்த படம் மிக பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது. கேஜிஎப் 2 இதுவரை கிட்டத்தட்ட 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றி காரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியாத அளவுக்கு ஹிந்தியில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது இந்த படம். அதேபோன்று,  தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

KGF-3

இதில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன. யாஷின் அனல் பறக்கும் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. இரண்டாம் பாகத்தில்  பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் அதீரா கதாபாத்திரத்தை வந்து மிரட்டி  இருந்தனர். இப்படம் வெளியாகி 1 மாதத்திற்கு மேல் ஆகியும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

KGF-3

இந்நிலையில் அடுத்து ரசிகர்கள் கவனம் முழுவதும் கேஜிஎப் 3 பக்கம் திரும்பி இருக்கிறது. 2ம் பாகத்தின் முடிவில் வந்த காட்சிகள் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது. மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என தகவல் பரவியது. ஆனால், தற்போது சலார் படத்தை இயக்கிவரும் பிரஷாந்த் நீல், அடுத்ததாக என்டிஆர் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளதால் கேஜிஎப் 3 படத்தின் சூட்டிங் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் உள்ளது. 

KGF-3

இந்நிலையில் தற்போது படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்  KGF 3ல் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட்டின் சிறப்பான நாயகனாக இருந்துவரும் ஹ்ரித்திக் ரோஷன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்தால் அது வேற லெவல் ட்ரீட் டாக அமையும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க....Vikram: விக்ரம் படத்தில்...கத்திரி போட்டு தூக்கிய அடல்ட் வசன காட்சிகள்...? வெளியான சென்சார் கட் ரிப்போர்ட்....

click me!