அட்வென்ச்சர் பைக் வாங்க போறீங்களா? ஹோண்டா கிராஸ் கப் 110 அறிமுகம்.. விலை இவ்வளவுதானா..

First Published Mar 11, 2024, 10:54 AM IST

ஹோண்டா கிராஸ் கப் 110 அட்வென்ச்சர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பிரபலமான கப் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு, ஹோண்டா கிராஸ் கப் 110 அட்வென்ச்சர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிராஸ் கப் 110 ஆனது ஆஃப்-ரோடு தயார் டயர்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள், ஹெட்லைட் கார்டு மற்றும் உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. ஆஃப்-ரோடுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த க்ராஸ் கப் 110ஐ இயக்குவது 110சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு இன்ஜின் ஆகும். இது வெறும் 8 பிஎச்பி பவர் மற்றும் டிசென்ட் டார்க்கை உருவாக்குகிறது. இந்த பைக் நான்கு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பைக்கை அதிகபட்சமாக 85 கிமீ வேகத்தை அடைய அனுமதிக்கிறது. இந்த புள்ளிவிபரங்களின் மூலம், இந்த ஹோண்டா முதன்மையாக நகர்ப்புற நிலைமைகளுக்காக தயாரிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

ஹோண்டா க்ராஸ் கப் 110 தற்போது சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு அதன் விலை சுமார் ரூ.1.40 லட்சம். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது.

ரூ.69,000க்கு அறிமுகம் செய்யப்பட்ட கோமாகி ஃப்ளோரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இவ்வளவு வசதிகள் இருக்கு..

click me!