ஸ்டைலா கெத்தா ஒரு பைக் வாங்க போறீங்களா... உங்களுக்காக 1 இல்ல 2 தரமான ஸ்கூட்டர்களை களமிறக்குகிறது ஹீரோ நிறுவனம்

First Published May 10, 2024, 11:34 AM IST

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூம் 160 மற்றும் ஜூம் 125 ஆகிய 2 புதிய மாடல் ஸ்கூட்டர்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Hero Xoom

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஆண்டு ஏராளமான புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்நிறுவனம் தற்போது அதன் முதல் பிரிமீயம் மேக்சி ஸ்டைல் பைக்கான ஜூம் 160 மற்றும் ஜூம் 125 ஆகிய 2 புதிய மாடல் ஸ்கூட்டர்களை நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வெளியிட திட்டமிட்டு உள்ளது. 

Hero Xoom bike

அநேகமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த இரண்டு புது மாடல் ஸ்கூட்டர்களும் சந்தையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. அந்த சயமத்தில் வெளியிட்டால் அதன் விற்பனையும் அதிகமாக இருக்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கருதுகிறது.ஏற்கனவே சந்தையில் உள்ள 125சிசி ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர்களான டிவிஎஸ் என்டார்க் 125, ரேஇசட் ஆர், டியோ 125, அவெனிஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக ஜூம் 125 ஸ்கூட்டர் களமிறங்க உள்ளது. 

இதையும் படியுங்கள்... ரூ.27 ஆயிரம் தள்ளுபடி.. மின்சார ஸ்கூட்டர் வாங்குவோருக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. விலை எவ்வளவு?

hero xoom 125R

இதில் 124.6cc என்ஜின் மற்றும் 9.5 ஹார்ஸ் பவருடன் வருகிறது. மேலும் 10.14Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஸ்கூடராக இது வருகின்றது. இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் உடன் 14-இன்ச் அலாய் வீலும் இடம்பெற்றுள்ளது. அதேபோல் மேக்ஸி ஸ்டைல் ஜூம் 160 ஸ்கூட்டர், சந்தையில் உள்ள ஏப்ரிலியா SXR160, யமஹா ஏரோக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக வரவுள்ளது. 

hero xoom 160

இந்த மாடல் ஸ்கூட்டரில் ரிமோட் கீ, லிக்யூடு கூல்டு 156cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 14ஹார்ஸ் பவர் மற்றும் 13.7Nm டார்க் திறன் கொண்ட ஸ்கூட்டராக உள்ளது. இந்த இரு ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரீமியம் பைக்குகளையும் நடப்பு நிதி ஆண்டுக்குள் ஹீரோ நிறுவனம் வெளியிட திட்டமிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... ரூ.15 ஆயிரம் தள்ளுபடி..ரூ.1600 இஎம்ஐ கட்டினால் போதும்.. அருமையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆஃபர்..

click me!