தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பிச்சுக்கிட்டு ஊத்தப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

First Published Jan 6, 2024, 9:34 AM IST

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

Tamil Nadu Rain

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் நல்ல மழை பெய்தது. சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் இந்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பிறகு மாநிலத்தில் பெரிதாக எந்தவொரு மழையும் இல்லாமல் இருந்தது. கடந்த வாரம் முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

TN Rain Update

அதன்படி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Rain Alert

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம்.

Chennai Rains

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜனவரி 8ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

TN Weather Update

ஜனவரி 9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..

click me!