சென்னையில் இந்த 3 நாட்களுக்கு தரமான சம்பவம் இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்.!

First Published Dec 12, 2023, 11:54 AM IST

மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டிபோட்ட நிலையில் அடுத்து சென்னையில் எப்போது மழை பெய்யும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தலைநகர் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் உணவு இல்லாமல் சொல்ல முடியாத துயரம் அடைந்தனர். இதனையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால், சில இடங்களில் மட்டும் வெள்ளம் வடியால் அப்படியே இருந்து வருகிறது. நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனால் சென்னையில் மழை என்றாலே மக்கள் பெரும் பீதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் அடுத்து எப்போது மழை பெய்யும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- டிசம்பர் 19-21 தேதிகள் சுவாரஸ்யமாக மாறி உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், என்ன நடக்கும் என்பது வரும் டிசம்பர் 15ஆம் தேதியில் தான் இன்னும் தெளிவாகத் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

click me!