தென்மாவட்டங்களில் மீண்டும் சம்பவம் இருக்கா? அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

First Published Dec 31, 2023, 3:05 PM IST

மழையை பற்றி கவலைப்பட வேண்டாம். புத்தாண்டில் உங்கள் வழக்கமான வேலையைத் தொடரலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

tamilnadu rain

எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொதுமக்களை மிரட்டியது. மிக்ஜாம் புயலால் வட தமிழகமும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை வெளுத்து வாங்கியது. 

tamilnadu weatherman

இந்நிலையில், மீண்டும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.  ஆனால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழையோ, மிதமான மழையோ பெய்ய வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 

tamilnadu weatherman Pradeep John

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;-  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழையோ, மிதமான மழையோ பெய்ய வாய்ப்பில்லை. அப்படியே மழை பெய்தாலும் அது மிகவும் ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் இருக்கும். எனவே அடுத்த 4-5 நாட்களுக்கு யாரும் மழையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். புத்தாண்டில் உங்கள் வழக்கமான வேலையைத் தொடரலாம் என தெரிவித்துள்ளார். 

Rain Alert

தென் தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கரு மேகங்கள் மற்றும் மழை துளிகள் விழுந்தால் பீதி அடைய வேண்டாம். சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி இது கடினமான ஆண்டாக அமைந்தது. தற்போது கனமழை இல்லை என்பதால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.  மேலும் தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தின் இறுதி மற்றும் 2வது வாரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Heavy rain

மாஞ்சோலை பெய்து வரும் மழையும் இன்று முதல் குறையும்.  நாட்டிலேயே சிறப்பு வாய்ந்த இடம், பள்ளத்தாக்கு அங்கு நகரும் ஒவ்வொரு அங்குல ஈரப்பதத்தையும் உறிஞ்சுகிறது.  வடகிழக்கு பருவமழையான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நாலுமுக்கு மற்றும் ஊத்து ஆகிய இரண்டு பகுதிகளும் 3000 மி.மீ மழையை தாண்டியதை நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. புத்தாண்டில் மணிமுத்தாறு அணைக்கு செல்லும் நீர்வரத்து 5000 கனஅடியாக இருந்தாலும் அங்கும் மழையை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளார். 

click me!