Pongal 2024 Gallery: குழந்தைகள் ஆரோக்கியத்தின் அருமருந்து கருப்பு கவுனி அரிசி பொங்கல்! செஞ்சு அசத்துங்க!

First Published Jan 11, 2024, 10:52 PM IST

பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள, கருப்பு கவுனி அரிசியை கொண்டு, சிறுசுகள் முதல் பெரியோர் வரை விரும்பும் பொங்கல் ரெசிபியை ஒரு நாள் செஞ்சி அசத்துங்க அசந்து போய்டுவாங்க.
 

பொங்கல் திருவிழா அன்று நாம் பாரம்பரியம் மாறாமல் புது பானையில்...  புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவது வழக்கம். அதே போல் விவசாயத்தின் உற்ற தோழனான மாடுகள், சேர் மிதித்து சோறு போடும் நம் விவசாயிகளுக்கும் நன்றி கூறும் விதமாக இந்த பொங்கல் பண்டிகை அமைகிறது.

பொங்கல் பண்டிகையில்... நாம் பாரம்பரியதின் படி செய்த பொங்கலை சாப்பிட்டு மகிழ்ந்தாலும்... உடலுக்கு ஆரோக்கியமான வகையில், எதிர்ப்பு சத்திகள் நிறைந்த, ஊட்டச்சத்துக்கள் கொண்ட பொங்கலையும் வாரத்தில் ஒரு முறையாவது செய்து சாப்பிட்டு பாருங்கள்.

அதற்க்கு முன் இந்த கருப்பு கவுனி அரிசியில் உள்ள பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதாவது இந்த அரிசி மன்னர்களுக்காகவே ஒரு காலத்தில் விளைவிக்கப்பட்டதாம். சீனா போன்ற நாடுகளில் இது மன்னர்களுக்கான அரிசி என்பதால் சாதாரண மக்கள் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசியில்  அதிக அளவு நார்ச்சத்தானது, 'LDL' என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஏதேனும் ஒரு வகையில் கூட நீங்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை எடுத்து கொள்ளலாம்.

சரி இந்த அரிசியை கொண்டு சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கல் போன்றே எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுங்கள். இந்த அரிசி எளிதில் வேகாது. எனவே இதனை சமைப்பதற்கு முதல் நாள் இரவு ஊற வைத்து விடுங்கள். 12 முதல் 15 மணிநேரம் இந்த அரிசி ஊற வைப்பது சிறந்தது.

பின்னர், குக்கரில் இந்த அரிசியை சிறிதளவு பாசி பயறு போட்டு 7 முதல் 8 விசில் வரை விட வேண்டும். அப்போது தான் பொங்கல் பதத்துக்கு இருந்த அரிசி நன்கு வெந்து கிடைக்கும். நீங்கள் சர்க்கரை பொங்கல் செய்வதாக இருந்தால், வெந்த அரிசியோடு நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளம் பாகு எடுத்து சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதில் ஏலக்காய், சிறிதளவு உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி , திராச்சை போன்றவற்றை கலந்து உங்களுக்கு தேவையான அளவு நெய் சேர்த்தால் கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் ரெடி. வீட்டில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் நெய்யை குறைந்த அளவே சேருங்கள்.

இனிப்பு பிடிக்காதவர்கள், குக்கரில் நன்கு வெந்த கருப்பு கவுனி அரிசியில்... நெய்யில் பொறித்த மிளகு, சீரகம், இஞ்சி , ஒரு பச்சை மிளகாய், கருவேப்பில்லை, சிறிதளவு பெருங்காயத்தூள் போட்டு போட்டு இறக்கி கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவு அதில் நெய் சேர்த்து கொண்டால்... இனிப்பு இல்லாமல் செய்த வெண்பொங்கல் டைப், கருப்பு கவுனி அரசி பொங்கல் ரெடி. இந்த அரசியில் இன்னும் பல வெரைட்டியான சமையலையும் நீங்க ஆரோக்கியமா செஞ்சி அசத்துங்க... கிச்சன் குயின்ஸ்.

click me!