இரவில் படுக்கும் முன் 'இத' செய்தால் ஆரோக்கியம் உறுதி! உங்களிடம் இந்த பழக்கம் இருக்கா..?

First Published Apr 10, 2024, 9:03 PM IST

இந்த உலகில் சோம்பேறிகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் இல்லை. எனவே, ஆரோக்கியமாக இருக்க இரவில் படுக்கும் முன் இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.

இந்த அவசர உலகில், பலர் இரவில் தாமதமாக சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்னும் சிலருக்குக்கோ, நள்ளிரவில் குடிப்பது வழக்கம். சிலருக்கு இரவில் சரியாக தூக்கம் வருவதில்லை. காரணம் மொபைல் மற்றும் மடிக்கணினியுடன் நேரத்தை செலவிடுவது அரிது. உங்களுக்கு தெரியுமா...இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு. இதை கெட்ட பழக்கங்கள் என்று கூட சொல்லலாம். அப்படியானல் நல்லவை என்ன..? அது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

இரவு உணவுக்குப் பிறகு நடைபயிற்சி: இந்த பழக்கம் உங்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது சொல்லுங்கள்...? சாப்பிட்ட பிறகு வெறும் 15 நிமிடம் நடப்பது உடல் நலத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா..? எப்படியெனில், இந்த ஒரு பயிற்சியின் மூலம் நீங்கள் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகும். இரவில் நல்ல தூக்கம் வரும். உங்கள் இரத்த சர்க்கரை அளவும் பராமரிக்கப்படும். எனவே, இன்று முதல் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பியுங்கள். அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை பெற்றுகொள்ளுங்கள்.

மேக்கப் அகற்ற மறக்காதீங்க: நாள் முழுவதும் மேக்கப்பில் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் கண்டிப்பாக மேக்கப்பை அகற்ற வேண்டும். ஏனெனில், நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் பெரும்பாலான ரசாயனப் பொருட்கள் தான் இருக்கும். இவை சருமத்தில் பருக்கள் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும். சிலருக்கு இது வயதான தோற்றத்தை  ஏற்படுத்தும் என்று கூட கூறலாம். எனவே, இரவில் மேக்கப்பை நீக்கிவிட்டு தூங்கினால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

பழங்கள் சாப்பிடுங்கள்: இரவில் பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் எல்லா பழங்களையும் அல்ல. உதாரணமாக, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால், செர்ரி, ஆரஞ்சு, தர்பூசணி ஆகியவற்றை சாப்பிட வேண்டாம். காரணம் இவை வாயு பிரச்சனையை ஏற்படுத்தும். 

தண்ணீர் குடிப்பது: ஆரோக்கியமான உடலுக்கு நீர் மிகவும் முக்கியமானது. எனவே இரவில் நல்ல அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் நல்லது.
இது உங்கள் உடலை சுத்தப்படுத்தும். மேலும், இரவில் காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை குடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். அவை நல்லதல்ல

மொபைல், லேப்டாப் பயன்படுத்த வேண்டாம்: இரவில் படுக்கும் முன் டிவி, மொபைல் அல்லது லேப்டாப் பார்ப்பது கண்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி உடலின் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.. ஏனெனில், இவற்றில் இருந்து வெளி வரும் கதிர்கள் தூக்க ஹார்மோனை சரியாக வெளியிடாமல், தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.

தியானம் செய்யுங்கள்: இரவில் உங்களால் நடக்கவோ அல்லது சின்ன உடற்பயிற்சி செய்யவோ முடியாவிட்டால், இரவு உணவிற்குப் பிறகு அமர்ந்து அமைதியாக தியானம் செய்யுங்கள். இது உங்கள் மனதை தெளிவுபடுத்துவது மட்டுமின்றி, இரவில் நன்றாக தூங்க உதவும். எனவே, இரவு தூங்கும் முன் 10 நிமிட தியானம் செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பாத மசாஜ்: தினமும் தூக்கமின்மையால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், இரவில் படுக்கும் முன் பாதங்களை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இதனால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தம் குறையும். குறிப்பாக, கோடையில் ஏற்படும் குதிகால் வெடிப்பை இது தவிர்க்கும்.

பல் துலக்க மறக்காதீர்கள்: காலையில் மட்டும் பல் துலக்கினால் போதாது. இரவில் படுக்கும் முன் பல் துலக்குவது மிகவும் அவசியம். இதனால் உங்கள் வாய் சுத்தமாகும்.

click me!