Nails White Spots : நகத்தில் வெள்ளை புள்ளி வருவது ஏன்..? ஏதேனும் நோயின் அறிகுறியா..?

First Published Apr 15, 2024, 5:02 PM IST

நகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளி உங்கள் உடலைப் பற்றி நிறைய சொல்கிறது தெரியுமா..? இது ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். 

உங்கள் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா.. நகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகள் உங்கள் உடலைப் பற்றி நிறைய சொல்கிறது. இந்த புள்ளிகள் 'லுகோனிசியா' என்று அழைக்கப்படுகிறது. இது வருவது மிகவும் சாதாரணமானது. இந்த புள்ளிகள் பல காரணங்களால் ஏற்படலாம். அவற்றில் ஒன்று தான்  'துத்தநாகக் குறைபாடு' ஆகும். அத்தகைய சூழ்நிலையில், நகங்களில் வெள்ளை புள்ளிகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளலாம்..

நகங்களில் வெள்ளை புள்ளிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

அலர்ஜி: சிலருக்கு உணவு, மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் என எதனாலும் ஒவ்வாமை ஏற்படும். எனவே, இந்த அலர்ஜியால் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்.

இதையும் படிங்க:  நகங்களின் நிறத்தை என்ன நினைச்சிங்க! அதை வைத்தே உங்க ஆரோக்கியத்தை சொல்லலாம்.. உங்க நகம் எப்படி இருக்கு பாருங்க!

பூஞ்சை தொற்று: நகங்களில் பூஞ்சை தொற்று காரணமாகவும் வெள்ளை புள்ளிகள் தோன்றும். இந்த தொற்று பொதுவாக ஈரமான சூழலில் வேலை செய்பவர்களுக்கு அல்லது பாதங்கள் ஈரமாக இருக்கும் நபர்களுக்கு தான் ஏற்படும்.

பரம்பரை காரணங்கள்: சிலருக்கு பரம்பரை காரணமாக கூட நகங்களில் வெள்ளை புள்ளிகள் தோன்றலாம்.

காயம்: நகங்களில் ஏற்படும் காயமும் வெள்ளை புள்ளிகள் தோன்றுவதற்கு காரணமாகும்.

நெயில் பாலிஷ்: நெயில் பாலிஷ் மற்றும் நெயில் ரிமூவரில் ரசாயனங்கள் இருக்கும். அவை நகங்களை சேதப்படுத்தி வெள்ளை புள்ளிகளை ஏற்படுத்தும்.

விஷம்: சில நச்சுப் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் போதும் நகங்களில் வெள்ளை புள்ளிகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: Nail Care Tips : உங்கள் நகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க..!!

மருந்துகள்: சில மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாக நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படலாம்.

தாதுக்களின் குறைபாடு: உடலில் துத்தநாகம் மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாக, நகங்களில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

என்ன செய்ய வேண்டும்:
உங்களுக்கு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் நினைத்தால், ஒவ்வாமையை உண்டாக்கும் பொருளைத் தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு பூஞ்சை தொற்று இருப்பதாக நீங்கள் நினைத்தால், மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள்.

உங்களுக்கு தாதுக்கள் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் உணவில் துத்தநாகம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நகங்களில் காயம் காரணமாக ஏதேனும் புண் இருந்தால், அதற்கு உடனே சிகிச்சையளிப்பது தான் நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!