தொண்டையில் தொற்று ஏற்பட்டால் இந்த 5 உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க!

First Published Feb 3, 2024, 11:43 AM IST

தொண்டையில் தொற்று இருக்கும் போது சாப்பிடவோ, குடிக்கவோ சிரமமாக இருக்கும். எனவே, இந்த சமயத்தில் என்னென்ன சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

வெளி உணவுகள்: உங்களுக்கு தொண்டை தொற்று இருந்தால், நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டாம். இந்த குப்பை உணவுகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 

எண்ணெய் உணவுகள்: எண்ணெய் உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது உணவுக்குழகில் பாக்டீரியா வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். மேலும் எண்ணெய் உணவுகள் வயிற்றில் வாயு, அஜீரணம் மற்றும் சில சமயங்களில் குமட்டலை ஏற்படுத்தும்.

காரமான உணவுகள்: தொண்டை தொற்று காரணமாக, உணவுக்குழாயில் உணர்திறன் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். இந்த உணவுகள் ஏற்கனவே வீக்கமடைந்த தொண்டையை எரிச்சலடையச் செய்யும்.

இதையும் படிங்க:  ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் இருமல், சளி தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்..!!

குளிர்ந்த உணவுகள்: தொண்டையில் தொற்று ஏற்பட்டால், குளிர்ந்த உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், குளிர்ந்த உணவு தொண்டையில் வீக்கத்தை அதிகரிக்கும்.

இதையும் படிங்க: தொண்டைப் புற்று நோய் கண்டறிவதற்கான சில அறிகுறிகள் இதோ...!!!

புளிப்பு உணவுகள்: புளிப்பு உணவுகள் தொண்டை தொற்றுகளை அதிகரிக்கச் செய்யும். மேலும் டான்சில் பிரச்சனை ஏற்பட்டால், புளிப்பு உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்துகின்றன. அதுபோல், புளிப்பு பழங்கள் டான்சில்ஸ் வீக்கத்தை அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!