Game Changer முதல்.. Rising Star வரை.. பிக் பாஸ் போட்டியாளர்கள் 9 பேருக்கு Surprise Awards - முழு லிஸ்ட் இதோ!

First Published Jan 14, 2024, 10:46 PM IST

Bigg Boss Season 7 : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று நிறைவடைந்தது. போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உலக நாயகன் கமல்ஹாசன் சில Surprise விருதுகளை வழங்கியுள்ளார்.

Poornima Ravi

கடந்த 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக பயணித்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இனிதே முடிவடைந்தது. பிரபல நடிகை VJ அர்ச்சனா இந்த சீசனின் வெற்றியாளராக மாறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 9 போட்டியாளர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதில் "கேம் சேஞ்சர்" என்ற விருது தினேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல "ஸ்போட்டிவ்" என்ற விருது மணிக்கும் "Determined" என்கின்ற விருது பூர்ணிமாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

"அவர் 1.5 பில்லியன் மக்களின் தலைவர்".. மாலத்தீவு பயணத்தை ரத்து செய்கின்றேன் - அதிரடியாக அறிவித்த நாகர்ஜுனா!

VJ Archana

அதே போல "செல்ஃப் மேட்" என்ற விருது நிசனுக்கும், "ரைசிங் ஸ்டார்" என்ற விருது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் வெற்றியாளராக மாறியுள்ள அர்ச்சனாவிற்கும், "இன்ஸ்பிரேஷனல்" என்ற விருது தமிழ் திரை உலகின் மூத்த நடிகையான விசித்ரா அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Maya s krishnan

அதேபோல Competitive என்கின்ற விருது விஷ்ணுவிற்கும், "Versatility" என்கின்ற விருது மாயா எஸ் கிருஷ்ணனுக்கும் இறுதியாக "Energetic" என்ற விருது சின்னத்திரை நடிகை ரவீனாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை மணியையும், மூன்றாவது இடத்தை நடிகை மாயாவும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Goat: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து! அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட் குஷியான ஃபேன்ஸ்!

click me!