முகத்தின் அழகை கெடுக்கும் சரும துளைகள்... விரைவில் சரி செய்ய பெஸ்ட் டிப்ஸ்!

First Published Jan 4, 2024, 8:00 PM IST

பொதுவாகவே நாம் எல்லோரும் முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவோம் ஆனால் அந்த அழகை கெடுக்கும் படி முகத்தில் சிலருக்கு குழிகள் இருக்கும். இந்த குழிகளை அடைப்பதற்கான சிறந்த வீட்டு வைத்தியம் இதோ..

நீங்கள் பார்த்திருப்பீர்கள் பலரது முகத்தில் பள்ளங்கள் அல்லது குழிகள்  இருக்கும். இதனால் அவர்கள் அவதிப்பட்டுகின்றனர். முகத்தில் உள்ள குழிகள் திறந்த துளைகள் என்று அழைக்கப்படுகின்றன. முகத்தில் அதிக துளைகள் இருந்தால்.. பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்காது. 

காரணம் முகத்தில் உள்ள பருக்களை கையால் உடைப்பதால், இந்த திறந்த துளைகள் ஏற்படுகின்றன. திறந்த துளைகள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர்காலத்தில் இந்த பிரச்சனையை தவிர்க்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்..

துளைகள் பிரச்சனை வராமல் இருக்க.. பருக்களை கைகளால் தொடக்கூடாது. ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெற, நீங்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த வைட்டமின்களை எடுத்துக்கொள்வது தோலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது.

மேலும், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, கேரட் போன்ற ஜூஸை காலையில் குடிக்க வேண்டும். இப்படி செய்தால்.. சருமத்தில் உள்ள சுருக்கங்கள், புள்ளிகள் குறைந்து.. அழகாக இருக்கும்.
 

திறந்த துளைகள் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத் தோலை முகத்தில் வட்ட வடிவில் தடவ வேண்டும். பிறகு 10 -15 நிமிடங்கள் வரை முகத்தை நன்கு மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஏனெனில் வாழைப்பழத்தில் லுடின் இருக்கிறது. இது சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். மேலும் இது பொட்டாசியத்துடன் சேர்ந்து சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்கிறது மற்றும் சருமத்துளைகளை இருக்குகிறது.

click me!