Vijay 66: தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட் கேட்டு ‘குஷி’ மோடில் விஜய் ரசிகர்கள்... ஓ.. .இதுதான் காரணமா..?

First Published Apr 25, 2022, 10:59 AM IST

Thalapathy 66: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில், உருவாகி வரும் தளபதி 66 படத்திலிருந்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  

thalapathi 66

பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி 66 படத்தில் நடிகர் விஜய், இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்துவருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை நடிகை ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

thalapathi 66

செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்பப் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை ஏப்ரல் 6 ம் தேதி நடத்தப்பட்டு, இதைத் தொடர்ந்து சென்னையில் முதல் கட்டமாக சில நாட்கள் மட்டும் ஷுட்டிங் நடத்தப்பட்டது. இதையடுத்து, இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 3 ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathi 66

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.  இதில் நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்கவுள்ளாராம். மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

thalapathi 66

விஜய்க்கு இதில் இரு அண்ணன்கள் எனக் கூறப்படுவதால் அதில் ஒருவராக மோகன்  நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

thalapathi 66

இதையடுத்து, 90ஸ் பிரபல ஹீரோவாக, தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ஷ்யாம் இப்படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மற்றொரு அண்ணன் ரோலில் நடிக்க வைக்க தெலுங்கில் பிரபலமான ஹீரோவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
 

thalapathi 66

இந்நிலையில், தற்போது தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷியாகியுள்ளது. வழக்கமாக விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது,  தான் தமான் இசையமைக்கும் தளபதி 66 படத்தில் விஜய்யை ஒரு பாடல் பாட வைத்துள்ளனராம். 

thalapathi 66

முதல் கட்ட ஷுட்டிங் முடிந்த உடனேயே விஜய்யை வைத்து முதல் பாட்டை ரெக்கார்டிங் செய்து விட்டார்களாம்.இந்த பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்படலாம் என கூறப்படும் நிலையில், ரசிகர்கள் விஜய் பாடிய முதல் தெலுங்கு பாடல் கேட்க அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.

vijay66

முன்னதாக, சச்சின் படத்திற்கு பிறகு , துப்பாக்கி படத்தில் இவர் பாடிய கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் பாடல் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் ஹிட் அடித்தது. அதற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் வருடத்திற்கு ஒரு படலாவது விஜய், பாடி விடுவார். சமீபத்தில், இவர் பாடிய மாஸ்டரில் குட்டி ஸ்டோரி, பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

click me!