பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் திடீர் ரத்து! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

First Published May 10, 2024, 11:02 AM IST

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Anna University Exam

தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணையை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன.

lok sabha election 2024

இந்த அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி  வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Engineering semester exams cancelled

இந்நிலையில் மே 15ம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15ம் தேதி  தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான பிறகு ஜூன் 6-ம் தேதியன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

click me!