Eid-Ul-Fitr 2024 Mehndi Tips: ரம்ஜானுக்கு மெஹந்தி போடுகிறீர்களா? ஒரே இரவில் சிவக்க 'இத' மட்டும் செஞ்சா போதும்!

First Published Apr 9, 2024, 8:34 PM IST

பண்டிகைகள் வந்தால் பலர் மெஹந்தி போடுவதை விரும்புவார்கள். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகைக்கு மெஹந்தி போடும் போது மெஹந்தி சிவக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

'ரம்ஜான்' இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். இது 'ரமலான்' பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. பலர் இந்த பண்டிகையை 'ஈகைத் திருநாள்' என்றும் கூறுவர்.. பிறருக்கு உதவும் நோக்கத்தோடு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவில், ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி, அதாவது நாளை வியாழன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 

இப்போது ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகைக்கு மெஹந்தி போடும் போது மெஹந்தி சிவக்க, சில இயற்கையாக குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். அது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கைகளை கழுவவும்: உங்கள் கையில் மெஹந்தி போடுவதற்கு முன் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே, கைகளை சோப்பு போடு நன்கு கழுவி கொள்ளுங்கள். பிறகு மெஹந்தி போட்டால் நன்றாக இருக்கும். 

மாய்ஸ்சரைசர் யூஸ் பண்ணாதீங்க: கைகளை கழுவிய பின் மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் மாய்ஸ்சரைசர்களில் உள்ள ரசாயனங்கள் கையில் மெஹந்தி சிவப்பாக மாறாமல் தடுக்கும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

காற்றில் காய வைக்கவும்: கையில் மெஹந்தியை போட்ட பிறகு காற்றில் தான் காயவைக்க வேண்டும். மருதாணி போட்ட பிறகு அதன் மேல் எதுவும் தடவ வேண்டாம்.

இதையும் படிங்க:  இப்தார் விருந்து ஏன்? ரமலானில் இஸ்லாமிய நண்பர்களுக்கு உதவ இதைத் தெரிஞ்சுக்கோங்க!

எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை: உங்களுக்கு தெரியுமா..எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை மெஹந்தியை சிவப்பாக மாற்ற உதவும். இதற்கு முதலில் எலுமிச்சை சாறு எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதை மருதாணி நன்கு காய்த பிறகு அதன் மேல் தடவவும். இப்படி செய்தால் உங்கள் கை சிவப்பாக மாறும்.

இதையும் படிங்க: ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணியை சாப்பிட்டு கொலஸ்ட்ரால் எகிறிவிடும் என்ற அச்சமா? அப்போ இந்த பானங்களை ட்ரை பண்ணுங்க!

கிராம்பு: அதுபோல, கிராம்பு மெஹந்தி நிறத்தை சிவப்பாக மாற்ற பெரிதும் உதவுகிறது. இதற்கு கடாயை எடுத்து அதில் கிராம்பு போட்டு வதக்கவும். அதிலிருந்து புகை வரும்போது மருதாணி போட்ட கைகளை அதில் காட்டவும். இப்படி காட்டினால் உங்கள் கை நல்ல சிவப்பாக மாறும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!