Chiyaan 62 : ‘சீயான் 62’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது இந்த நடிகையா? வெளியான அசத்தல் அப்டேட்

First Published Apr 4, 2024, 8:25 AM IST

சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் சீயான் 62 படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Chiyaan Vikram

சித்தா படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சீயான் 62'. இப்படத்தில் 'சீயான்' விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் நடிப்பு அரக்கன் எஸ். ஜே. சூர்யா, மலையால நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

vikram, arunkumar

ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீயான் 62 படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி இளம் நடிகை துஷாரா விஜயன் தான் இப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Suriya : அரசியல்வாதி போல் வந்து... கொடுமுடி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா - போட்டோஸ் இதோ

dushara vijayan

நடிகை துஷாரா விஜயன் ஏற்கனவே தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்த துஷாரா தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை முடித்த கையோடு அவர் சீயான் 62 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

chiyaan 62 heroine

நடிகை துஷாராவுக்கு நடிகர் சீயான் விக்ரமுக்கும் 31 வயது வித்தியாசம். இளம் வயது நடிகையுடன் நடிகர் விக்ரம் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்படுகிறது. தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.‌ இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... சின்ன வயசுல எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க... நயன்தாராவின் அன்சீன் போட்டோவுக்கு கிடைத்த அடிபொலி ரெஸ்பான்ஸ்

click me!