மடியில் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு இலவசம்..

First Published Feb 20, 2024, 10:07 PM IST

பலரும் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் உண்டாகும் நோய்கள் என்னென்ன, அவற்றில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Laptop Tips

உங்கள் மடியில் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று உங்களுக்குத் தெரிந்தால், அடுத்த முறை நீங்கள் லேப்டாப்பை மடியில் வைக்கவே போவதில்லை.  மடியில் லேப்டாப்பைப் பயன்படுத்துவது மிகவும் சாதாரண விஷயமாகிவிட்டது.

Laptop On Lap

நீங்களும் உங்கள் மடியில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு வேலை செய்தால், உங்கள் இந்த சிறிய தவறு உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கலாம். நிச்சயமாக, உங்கள் மடியில் மடிக்கணினியுடன் படுக்கையில் வேலை செய்வது நல்ல விஷயமாக தெரிந்தாலும், அதில் பெரிய ஆபத்து ஒளிந்து உள்ளது.

Laptop Usage

மடிக்கணினியில் இருந்து வெளியேறும் சூடான காற்று தோலில் எரிச்சலை ஏற்படுத்தும். இது டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்களில், மடிக்கணினிகளில் இருந்து வரும் சூடான காற்று விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் குறைக்கும். மடியில் மடிக்கணினியை உபயோகிப்பதும், தவறான தோரணையில் அமர்ந்திருப்பதும் முதுகுவலியை ஏற்படுத்தும்.

Working In Bed

இருப்பினும், மடியில் மடிக்கணினியைப் பயன்படுத்துவது சருமத்தையும், கருவுறுதலையும் பாதிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. ஆனால் உஷாராக இருப்பது அவசியம். நீங்களும் இந்த நோய்களைத் தவிர்க்க விரும்பினால், மடிக்கணினியை மேசையில் வைத்து இயக்குவதே சிறந்தது.

Laptop eat

ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கும் வேளையில் இருந்து சிறிய ஓய்வு எடுத்து, உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். இந்த டிப்ஸ்களை பின்பற்றி மடியில் லேப்டாப்பை வைத்துக்கொள்வதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. தள்ளுபடி விலையில் ஐபேடையும் வாங்குங்க..

click me!