கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில்.. விஜய் சேதுபதி கேரக்டரை நிராகரித்த 2 பிரபலங்கள்! ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா

First Published Mar 18, 2024, 11:08 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், 2022-ஆம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தில்.. விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

Vikram Movie

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தில் ஃபஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதே போல் ஏஜென்ட் டீனாவின் கதாபாத்திரமும் அதிக அளவில் பேசப்பட்டது.
 

இந்த படத்தில் வழக்கமாக வில்லாக இல்லாமல், மிகவும் கூலான வில்லனாக 'சந்தானம்' கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் விஜய் சேதுபதி. மேலும் இவருக்கு மட்டும் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தனர். ரோலக்ஸ் என்கிற வில்லன் ரோலில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் வந்து மெர்சல் செய்திருந்தார்.

STEM துறையில் பெண்கள் வர்றதுக்கு இந்த பாகுபாடான அணுகுமுறை தடையா இருக்கு! நடிகர் சூர்யா பேச்சு!
 

சுமார் 100 நாட்கள் திரையரங்கில் ஓடிய இப்படம், 150 கோடியில் எடுக்கப்பட்டு 450 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் வலது கையாக... கட்டிங் பிளேடு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜாபர் சாதிக். இவர் பழைய பேட்டி ஒன்றில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முன்பு நடிக்க இருந்த இரு ஹீரோக்கள் பற்றி கூறியுள்ளார்.

vikram movie location pic

அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ்... விஜய் சேதுபதியை சந்தானம் கதாபாத்திரத்திற்கு அணுகுவதற்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, நடிகர் பிரபு தேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரை அணுகியதாகவும், அவர்கள் அந்த சமயத்தில் பிசியாக இருந்ததால்... நடிக்க முடியாமல் போகவே, இந்த வாய்ப்பு விஜய் சேதுபதியிடம் சென்றுள்ளது. அவர் உலக நாயகன் கமல்ஹாசன் படம் என்றதும் ஓகே சொல்லி படத்தையும் நடித்து கொடுள்ளார். ஆனால் விஜய் சேதுபதி எதிர்பார்த்ததை விட, இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம்  பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 5.! வெளியேறிய வெங்கடேஷ் பட்.. அவருக்கு பதில் செஃப் தாமுடன் கை கோர்த்த பிரபல நடிகர்!

click me!