முகேஷ் அம்பானி வீட்டு பணியாளர்களின் மாத சம்பளம் இத்தனை லட்சமா? ஷாக் ஆகாம படிங்க..

First Published Mar 19, 2024, 8:56 AM IST

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய தொழிலதிபரும், கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி தனது அபரிமிதமான செல்வத்திற்காக அறியப்படுகிறார். பலர் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கையை அவரும் அவரின் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த தனது மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் பேசு பொருளாக மாறியது.

ambani family marriage

மும்பையின் உயர்மட்ட அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆண்டிலியா என்ற ஆடம்பர பங்களாவில் அம்பானி குடும்பம் வசித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புராண தீவின் பெயரான ஆண்டிலியா தனது பங்களாவுக்கு வைத்தா நீதா அம்பானி. ஆண்டிலியா ஒரு வீடு மட்டுமல்ல, ஆடம்பரத்தின் சின்னமாகவும் உள்ளது. இங்கு முகேஷ் அம்பானி, அவரது தாய் கோகிலா பென், மனைவி நீதா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த், மருமகள் ஸ்லோகா மற்றும் பேரன் பிருத்வி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

Antilia

சுமார் $2.2 பில்லியனுக்கும் மதிப்புள்ள இந்த பங்களா, உலகளவில் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடாக உள்ளது. ஆன்டிலியாவில் மூன்று ஹெலிபேடுகள், 168 கார்களுக்கான இடம், 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், தோட்டங்கள், யோகா ஸ்டுடியோ, நீச்சல்குளம், ஸ்பா மற்றும் கோயில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு கார்களை சர்வீஸ் செய்ய 7வது மாடியில் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட வீடு இரண்டு அமெரிக்க நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது,  2004 இல் தொடங்கப்பட்டது முதல் 2010 இல் முடிவடைந்தது. அம்பானி குடும்பம் 2011 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தது.சரி முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானியின் தொழிலாளர்களின் சம்பளம் என்ன?

27 மாடிகளைக் கொண்ட இந்த சொகுசு மாளிகையில், சுமார் 600 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தோட்டக்காரர்கள், எலக்ட்ரீஷியன்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், பிளம்பர்கள், ஓட்டுநர்கள், பணிப்பெண்கள் மற்றும் சமையல்காரர்கள் என பலர் வேலை செய்கின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் தொழிலாளர்களில் பலர் வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், எப்போது வேண்டுமானாலும் அணுகும் வகையில் இருக்கவும், வளாகத்திற்குள் வசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பணியாளர்கள் குழு ஆண்டிலியாவின் மகத்துவத்தையும் செயல்பாட்டையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஒவ்வொரு பணியாளருமே அம்பானி குடும்பத்தின் மகத்துவத்திற்கும் வசதிக்கும் பங்களிக்கின்றனர். இங்குள்ள பல ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.3 லட்சமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!