தினமும் பப்பாளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

First Published Jan 29, 2024, 5:10 PM IST

தினமும் பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பப்பாளியில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்ச்த்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கிறது. மேலும் இது மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது.

papaya

பப்பாளி குடல் இயக்கங்களை சீராக வைப்பதிருப்பதுடன், உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. வைட்டமின் சியின் களஞ்சியமாக உள்ள பப்பாளி மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். 

papaya

பப்பாளியில் பப்பெய்ன் என்ற செரிமான நொதி உள்ளது. இது, அஜீரணம், நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்க இது உதவும். பப்பாளி வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ., ஃபோலேட், மெக்னீசியம், ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

எனினும் பப்பாளி சாப்பிட சிறந்த நேரம் எது? உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணிநேரம் கழித்து பப்பாளியை உட்கொள்வது சிறந்த நேரம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பப்பாளியின் ஊட்டச்சத்துக்கள் உடலால் திறம்பட உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது.

பப்பாளியின் நார்ச்சத்து உடலில் இருக்கும் நச்சுகளையும், கழிவுகளையும் இயற்கையாகவே அகற்றுகிறது.உணவு சாப்பிட்ட பின் 2 மணி நேரம் கழித்து பப்பாளியை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது, சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது.

papaya

உணவு சாப்பிட்ட பின் பப்பாளியை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்விற்கு பங்களிக்கிறது, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாகவும் இருக்கிறது.

பப்பாளியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை உடலால் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் ,

click me!