ராம் இயக்கத்தில் நிவின் பாலி.. ரிலீசுக்கு முன் கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம் - "ஏழு கடல் ஏழு மலை" படைத்த சாதனை!

First Published Dec 19, 2023, 7:21 AM IST

Yezhu Kadal Yezhu Malai : பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் முதல் முறையாக மலையாள நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் படம் தான் ஏழு கடல் ஏழு மலை.

Nivin Pauly

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான "பேரன்பு" திரைப்படத்திற்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக இன்னும் எந்த திரைப்படத்தையும் இயக்கி வெளியிடவில்லை இயக்குனர் ராம் என்பது அனைவரும் அறிந்தது. மேலும் அவருடைய இயக்கத்தில் விரைவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரலாறு காணாத பேரிடர்!! கையெடுத்து கும்பிட்டு முதல்வருக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ்!

Anjali

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு துவங்கி தற்பொழுது ரிலீசாக காத்திருக்கும் திரைப்படம் தான் ராம் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் "ஏழு கடல் ஏழு மலை" என்கின்ற திரைப்படம். வழக்கமான தனது திரைக்கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு வித்தியாசமான கதைகளை இந்த திரைப்படத்தில் கையாண்டு உள்ளார் இயக்குனர் ராம் என்று கூறப்படுகிறது.

Actor Soori

இது திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நவீன் பாலி, ஏற்கனவே ராமின் "கற்றது தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகை அஞ்சலி, தற்பொழுது காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறி உள்ள நடிகர் சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வெளியிட இருக்கிறார். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

V House Production

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின்படி IFFR எனப்படும் International Film Festival Rotterdam நிகழ்வில், வெள்ளித்திரை திரைப்படங்களுக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாக "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது ரிலீசுக்கு முன்பே அந்த திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து V House ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், திரைப்படம் வெளிவரும் முன்பே கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு கிடைக்கும் முதல் பன்னாட்டு அங்கீகாரம். இயக்குனர் ராம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கு நன்றி என்று கூறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!