Dhanush Case: கொலை முயற்சியா..? 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வேண்டும்...மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ்

First Published May 21, 2022, 9:48 AM IST

Dhanush Case: நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக  நடிகர் தனுஷ் சார்பில்  வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கதிரேசன்- மீனாட்சி தம்பதி தம்பதியினர்:

நடிகர் தனுஷ் எங்கள் மகன் என மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மதுரை, மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதில் தனுஷ் தங்களின் மகன் தான் என்றும் கடந்த 2012ஆம் ஆண்டு எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், தனுஷ் தங்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கை பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
 

dhanush

கொலை முயற்சியா..? 

இதையடுத்து, பண பலம் ஜெயித்து விட்டதாக  கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த நிலையில், நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு கதிரேசன் தம்பதியினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸில், கஸ்தூரிராஜா தங்களைக் கொலை செய்ய முயற்சித்ததாகவும், அதற்காக நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும்,  குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
 

Kasthuri Raja

10 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு:

இந்நிலையில், தற்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மீறினால் ரூ 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் எனவும், வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் படிக்க....Samantha: அதீத அன்பினால் வந்த காதல்...சமந்தாவின் லேட்டஸ்ட் போஸ்ட் பார்த்து குழம்பிப்போன நெட்டிசன்கள்..

click me!