எடுத்து வைங்க டா அடுத்த நேஷனல் அவார்ட.... குபேரா படத்துக்காக டோட்டலாக மாறிய தனுஷ் - வைரலாகும் பர்ஸ்ட் லுக்

First Published Mar 8, 2024, 7:07 PM IST

நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வரும் டி51 திரைப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.

Dhanush

தமிழ் திரையுலகில் செம்ம பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன கேப்டன் மில்லர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராயன். தனுஷின் 50-வது படமான இதனை அவரே இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

Dhanush Sekhar kammula Movie

ராயன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமொன்றிலும் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் நடிகர் நாகார்ஜுனாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... வயசாக வயசாக மெருகேறிக்கிட்டே இருக்க... நயனை ஒயினோடு ஒப்பிட்டு Women's Day வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

Dhanush D51 movie title

வாத்தி படத்துக்கு பின்னர் நடிகர் தனுஷ் நடிக்கும் நேரடி தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்காலிகமாக DNS என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் லுக் டீசரை மகா சிவராத்திரி தினமான இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

Kubera Movie First Look

அதன்படி தனுஷின் 51-வது படத்திற்கு ‘குபேரா’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் தனுஷ். குபேரா திரைப்படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது. வாத்தியை போல் இப்படமும் தெலுங்கில் மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... "நல்லாத்தான்பா பாடுறாரு".. மக்கள் செல்வன் குரலில் ஒலிக்கும் "காதல் குமாரு" பாடல் - வைரலாகும் Lyrical Video!

click me!