சித்திரை மாத ராசி பலன்கள் 2024: எப்படி இருக்கும் தமிழ் புத்தாண்டு ..? அதிஷ்டம் வரபோகும் ராசி எது..?

First Published Apr 11, 2024, 12:57 PM IST

இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. எனவே, சித்திரை மாதத்தில் 12 ராசிக்கார்களுக்கான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
 

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் ஏற்கனவே பல கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சித்திரை மாதத்தில் பெரிய விடிவு காலத்தைக் காண்பார்கள். உங்களுக்கு நல்ல காலம் பிறப்பது உறுதி. பதவி உயர்வுகள் தேடி வரும். சித்திரை மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் பல சுக பலன்களை பெறுவார்கள்.

ரிஷபம்: இந்த சித்திரை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் புதிய வாகனம் வாங்குவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்களின் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்களே இந்த சித்திரையில் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாவது உறுதி.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே இந்த ஆண்டு சித்திரை மாதம் உங்களுக்கு நன்மைகளை தான் வாரி வழங்கும். உங்களது பணம் ஐந்து மடங்காக உயரும். பண பிரச்சினைகள் சிக்கித் தவிப்பவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். தீராத கடனை தீர்ப்பதற்கான யோகம் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பது உறுதி.

கடகம்: கடக ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றியை காண்பதற்கான மாதம் தான் இந்த சித்திரை மாதம். தொழிலில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக, வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உங்கள் பிரச்சனைகளின் தீர்வுகாண மாதம் இந்த சித்திரை மாதம் ஆகும். ஆக மொத்தம் இந்த சித்தரை மாதம் உங்களுக்கு சுப மாதமாகும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே உங்களுடைய அனைத்து காரியங்களும் நன்மையாக முடியும்.   இந்த சித்திரை மாதத்தில் திடீர் அதிர்ஷ்டங்கள் குவியும். உங்களது வேலை பளு குறையும். நீங்கள் செய்யும் வேலையில் பெரிய முன்னேற்றத்தையும் காண்பீர்கள். சொல்லப் போனால் மற்ற ராசிகளை பார்க்கிலும் இந்த சித்திரை மாதம் உங்களுக்கு சுப மாதமாகும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் வெளிநாட்டுக்கு போகும் வாய்ப்பு அமையும். நாள்பட்ட வியாதிகளுக்கு  தீர்வு கிடைக்கும். சட்ட சிக்கலில் சிக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களே இந்த சித்திரை மாதத்தில் நீங்கள் பல அதிசயங்களை காண்பது உறுதி.

துலாம்: துலாம் ராசிக்காரர்களே இந்த சித்திரை மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றத்தைக் கொண்டு வரும். திருமணங்கள் கைகூடும்.
கூட்டுத்தொழில் நல்ல  முன்னேற்றத்தை காண்பீர்கள். வியாபாரத்தால் நல்ல ஆதாயம் அமையும். சகோதரர்களிடான பிரச்சினை நீங்கும்.   

விருச்சகம்: இந்த சித்திரை மாதத்தில் விருச்சக ராசி காரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். செய்யும் தொழிலில் வெற்றி உண்டு. நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயில் இருந்து விடுதலை உண்டாகும். வாழ்க்கையில் சுப காரியம் நடக்கும். 

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சித்திரை மாதம் பொற்காலம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும். உங்கள் எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். உங்கள் எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக முடியும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மகரம்: மகர ராசிக்காரர்களே நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு இந்த சித்திரை மாதத்தில் தீர்வு கிடைக்கும். திடீர் பணவரவு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும். வாகனம் ஓட்டும்போது மட்டும் எச்சரிக்கையாக இருங்கள். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்: கும்ம ராசிக்காரர்களுக்கு இந்த சித்திரை மாதத்தில் திருமணம் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.  செய்யும் தொழிலில் வெற்றியை காண்பீர்கள். மேலும் எதிர்பாராத அளவிற்கு லாபத்தையும் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களே இந்த சித்திரை மாதத்தில் உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எடுத்த காரியங்களில் வெற்றியை காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத வேலை உங்களைத் தேடி வரும். கோடைகால நோய்கள் வரலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

click me!