பிளாஸ்டிக்கை தவிர்க்க CSK புதிய திட்டம் – சென்னையில் பேருந்து நடத்துனர்களுக்கு 8000 Metal Whistle பரிசு!

First Published May 6, 2024, 9:58 PM IST

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சென்னையில் உள்ள பேருந்து நடத்துனர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 8000 மெட்டல் விசில்களை பரிசாக வழங்க உள்ளது.

8000 Metal Whistle MTC Bus Conductors

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக விளையாடி வருகின்றனர். தற்போது ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா, ராஜஸ்தான், சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய 4 அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

8000 Metal Whistle MTC Bus Conductors

கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்ச்சியுடன் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தொடங்கியது. இதில் முதல் போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனை வெற்றியோடு தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

IPL 2024, CSK

தரம்சாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

CSK 8000 Metal Whistle

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வேகமாக 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எஞ்சிய 3 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகள் அகமதாபாத், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெறுகிறது.

Chennai Super Kings, IPL 2024

இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய திட்டத்தை கையிலெடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் பேருந்து நடத்துனர்களுக்கு 8000 மெட்டல் விசில்களை பரிசாக வழங்க உள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது:

IPL 2024

விசிலுக்கும் சென்னைக்கும் தனித் தொடர்பே உண்டு. ஒன்று ரசிகர்களின் விசில் சத்தம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், மற்றொரு விசில் சத்தமானது சென்னை சிட்டியை பல தசாப்தங்களாக இயங்க வைத்துள்ளது. அது தான் பேருந்து நடத்துனரின் விசில் சத்தம்.

CSK and MTC

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துடன் (எம்டிசி) இணைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நகரைச் சுற்றியுள்ள பேருந்து நடத்துனர்களுக்கு தற்போதுள்ள பிளாஸ்டிக் விசில்களுக்கு பதிலாக 8000 தரமான மெட்டல் விசில்களை வழங்க உள்ளது.

8000 Metal Whistle Gift

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறியிருப்பதாவது: மாநரக பேருந்துகளின் நடத்துனர்களுக்கு விசில் வழங்குவதில் சிஎஸ்கே மகிழ்ச்சி அடைகிறது. இந்த விசில் எப்போதும் சிஎஸ்கே மற்றும் சென்னையுடன் இணைந்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இது சிறந்த வழியாகும். விசில் நீண்ட காலம் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

Chennai Super Kings

மேலும், இந்த சீசனில் எம்டிசி உடனான ஒப்பந்தம் மூலமாக ஏராளமான ரசிகர்கள் பயன் அடைந்துள்ளனர். இதில், போட்டி டிக்கெட்டுகளுடன் ரசிகர்கள் போட்டி நாட்களில் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MTC Bus Conductors

சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிகளின் போது ரசிகர்களின் வசதி மற்றும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்த சீசனில் சிஎஸ்கே நிர்வாகம் எம்டிசி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

whistling

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக சிஎஸ்கே ஹோம் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் ரசிகர்கள் ஏசி அல்லாத மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

click me!