Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 நேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!

First Published Jan 6, 2024, 6:49 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

tamil nadu electricity board

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Chennai power cut

தண்டையார்பேட்டை:

கும்மாளம்மன் கோவில் தெரு, G.A சாலை, T.H சாலை, சோலையப்பன் தெரு, கப்பல்போல தெரு, V.P கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலு முதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு, மன்னப்பன் தெரு, தங்கவேல் தெரு, தங்கவேல் தெரு. , நைனியப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!