யார் இந்த எஸ்.ஜி.சூர்யா? தென் சென்னை தொகுதியில் 200க்கும் மேற்பட்டவர்களின் கல்வி அறிவு பெற உதவி!

By vinoth kumar  |  First Published May 18, 2024, 9:27 AM IST

நடுத்தர குடும்பத்தில் பிறந்து பொதுத்தேர்வில் 98.3 சதவீத மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவன் தருண் பாபு மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்த எஸ்.ஜி.சூர்யா, முதல் செமஸ்டருக்கான கல்லூரி கட்டணத்தை காசோலையாக வழங்கி வாழ்த்தினார். 


பாஜக மாநில செயலாளரான எஸ்.ஜி.சூர்யா தென்சென்னை வேளச்சேரி தொகுதி 175-வது வட்டத்தில் 12ம் வகுப்பில் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்த மாணவனின் கல்விச் செலவை முற்றிலும் ஏற்றுக் கொண்டுள்ளார். 

அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டலை விட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது கோடி புண்ணியத்திற்கு சமமானது என்றார் பாரதியார். அந்த வகையில் கல்வியில் சாதித்து வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு பலரும் பல்வேறு வகைகளில் உதவி புரிந்து வருகின்றனர். இதற்கு காரணம் அனைத்து செல்வத்தையும் விட அழியாத கல்விச் செல்வத்தை ஒருவருக்கு வழங்க வேண்டும் என்ற உயர எண்ணமாகும். சமீபத்தில் பாஜக மாநில செயலாளரான எஸ்.ஜி.சூர்யா 12ம் வகுப்பில் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்த மாணவனின் கல்விச் செலவை முற்றிலும் ஏற்றுக் கொண்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: School College Holiday: மே 29-ம் தேதி விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

கடந்த 6ம் தேதி தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசு பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் மதிப்பெண்கள் ரீதியாக பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தனர். அவ்வாறு சாதனை படைத்த ஏழை எளிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களோடு, அடுத்தக்கட்டமாக அவர்கள் மேற்படிப்பை தொடருவதற்கான உதவிக்கரங்களும் நீண்டு வருகிறது. 

அந்த வகையில், வேளச்சேரியைச் சேர்ந்த பாஜக தொண்டரின் மகனான தருண் பாபு என்பவர் 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். குறிப்பாக அக்கவுண்ட்ஸ், காமர்ஸ், பிசினஸ் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். அவரை பாஜக சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்திய  தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, அம்மாணவன் பி.காம் படிப்பதற்கான ஒட்டுமொத்த கல்விச்செலவையும் தனது நமோ அறக்கட்டளையே ஏற்கும் என அறிவித்தார். இதன் முதற்கட்டமாக, நடுத்தர குடும்பத்தில் பிறந்து பொதுத்தேர்வில் 98.3 சதவீத மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவன் தருண் பாபு மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்த எஸ்.ஜி.சூர்யா, முதல் செமஸ்டருக்கான கல்லூரி கட்டணத்தை காசோலையாக வழங்கி வாழ்த்தினார். 

இதையும் படிங்க: TNEB : 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா.? வெளியாகும் தகவல் உண்மையா.? மின்சார வாரியம் விளக்கம்

எஸ்.ஜி.சூர்யா தனது நமோ வாசவி பவுண்டேஷன் என்னும் தொண்டு நிறுவனத்தின் மூலம் இவர் செய்து வரும் சேவைகளால் பல்லாயிரக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர். நமோ மீல் NaMo Meal திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு ஒரு வேளை வயிறார உணவளிக்கும் திட்டம், நமோ குருகுலம் NaMo Gurukulam மூலம் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வியறிவு பெற உதவி வருகிறார். குறிப்பாக தென் சென்னை தொகுதியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோவிலூர் சுந்தரத்தின் பேரன்தான் பாஜக மாநில செயலாளர்  எஸ்.ஜி.சூர்யா. 

click me!