ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ.. லைஃப் டைம் பேட்டரி.. ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..

First Published Apr 12, 2024, 11:26 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 50 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Cheapest Electric Scooter

புகழ்பெற்ற எஸ்ஏஜி குழுமத்தின் லெக்ட்ரிக்ஸ் ஈவி நிறுவனம் சமீபத்தில் சந்தையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ. 49,999 மட்டுமே.

Electric Scooter

மேலும், சேவையின் ஒரு பகுதியாக, இ-ஸ்கூட்டருக்கான பேட்டரியும் வழங்கப்படுகிறது. அதாவது சந்தா அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பேட்டரி சேவைக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

Lectrix Electric Scooter

இதுபற்றி கூறிய அந்நிறுவனத்தினர், ICE இன்ஜின் ஸ்கூட்டர் வாங்க, குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் செலவிட வேண்டும். ஆனால் எங்களிடம் ரூ. 49,999க்கு மின்சார ஸ்கூட்டரை வழங்குகிறோம்.

Lectrix Electric Scooter Launches

மேலும் பெட்ரோல் கட்டணம் மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. எங்களின் சந்தா திட்டத்தில் EV ஸ்கூட்டர் வாங்கினால், சிக்கனமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

Lectrix Scooter

மற்ற மாடல்களுடன் ஒப்பிடுகையில், நிறுவனம் தனது லெக்ட்ரிக்ஸ் EV, பேட்டரி-ஒரு-சேவை திட்டத்தின் கீழ் விற்கப்படும் புதிய மின்சார ஸ்கூட்டர், 40 சதவீதம் மலிவானது என்று கூறுகிறது.

Lectrix lxs 2.0

இந்த EV ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ தூரம் பயணிக்க முடியும். ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆகும். வாழ்நாள் பேட்டரி உத்தரவாதமும் உள்ளது.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!