இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் தகவல்.!

First Published Feb 2, 2024, 9:01 AM IST

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Meteorological Centre

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.

இதையும் படிங்க: School College Holiday: பிப்ரவரி 2ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

Chennai Rain

மற்ற மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில், இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

Tamilnadu Heavy Rain

இந்நிலையில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க:  டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. 12ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்.. மாத சம்பளம் ரூ 71000 வரை..

click me!