68 வயதில் இது தேவையா? பட விழாவில் நடிகை பிரியாமணியை தகாத முறையில் தொட்டு முகம் சுழிக்க வைத்த போனி கபூர்!

First Published Apr 10, 2024, 5:37 PM IST

நடிகை பிரியாமணி 'மைதான்' பட விழாவில் கலந்து கொண்டபோது, அவரிடம் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தகாத முறையில் தொட்டு அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
 

நடிகர் அஜய் தேவன் நடிப்பில் உருவாகியுள்ள 'மைதான்'  திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் அமித் சர்மா இயக்கியுள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக முதலில் பிரபல இளம்  நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த நிலையில், பின்னர் அவர் தோற்றம் இப்படத்திற்கு செட் ஆகாததால் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக நடிகை பிரியாமணி தேர்வு செய்யப்பட்டார்.

மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் இந்தியாவைச் சேர்ந்த ஃபுட்பால் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்திற்கும் அதே போல் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

LIVE: ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் துவங்கியது!

இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நடந்த போது, அதில் இப்படத்தில் நடித்த நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியாணி, தயாரிப்பாளர் போனி கபூர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அங்கு தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை பிரியாமணி உடன் சேர்ந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது பிரியாமணியின் அனுமதியின்றி அவரை தகாத முறையில் தொட்டு போனி கபூர் போஸ் கொடுத்ததாக, சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோவில் பிரியாமணி அசௌகரியமாக உணர்வதையும் பார்க்க முடிகிறது. 68 வயதில் இதெல்லாம் தேவையா என நேரடியாகவே நெட்டிசன்கள் சிலர் போனி கபூரை வெளுத்து வாங்கி வருகின்றனர். 

Karthigai Deepam: கண் விழித்த அபிராமி.! ஆதாரங்களுடன் சிக்கிய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
 

click me!