ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே 60 வயது அரசியல்வாதிக்கு ஜோடியாக நடித்து அதிர்ச்சி கொடுத்த ரச்சிதா

First Published Mar 8, 2024, 12:39 PM IST

தமிழ் சீரியல்களில் ஹீரோயினாக நடித்து கலக்கிய ரச்சிதா மகாலட்சுமி, தற்போது கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார்.

Jaggesh, Rachitha Mahalakshmi

பெங்களூருவை சேர்ந்தவரான ரச்சிதா, ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். இதையடுத்து பாரிஜாதா என்கிற படம் மூலம் கடந்த 2012-ம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அதன்பின்னர் தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சென்னையில் வந்து செட்டில் ஆனார். தமிழில் ரச்சிதா முதன்முதலில் நடித்த சீரியல் பிரிவோம் சந்திப்போம். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரச்சிதா.

Rachitha Mahalakshmi debut as heroine

தினேஷ் - ரச்சிதா ஜோடிக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின்னரும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த ரச்சிதாவுக்கு சரவணன் மீனாட்சி சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த சீரியலில் ரியோவுக்கு ஜோடியாக நடித்த அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உருவானது. இதையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம், விஜய் டிவியில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நாயகியாக நடித்தார்.

இதையும் படியுங்கள்... தள்ளிப்போகும் தனுஷ் படம்... தம்பி நடிகருடன் இணையும் மாரி செல்வராஜ் - மாமன்னன் இயக்குனரின் மாஸ் சம்பவம் லோடிங்

Rachitha Mahalakshmi Kannada Movie

இதனிடையே தன்னுடைய கணவர் தினேஷ் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்துவிட்ட ரச்சிதா தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் ரச்சிதா. அந்நிகழ்ச்சி முடிந்ததும் அவர் எதிர்பார்த்தபடியே சினிமா வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Rachitha and Jaggesh in Ranganayaka Movie

தமிழில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள ரச்சிதா, கன்னடத்தில் ரங்கநாயகா என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். அப்படத்தில் அவர் ஜக்கேஷ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 60 வயதாகும் ஜக்கேஷ் தற்போது எம்பி ஆகவும் பதவி வகித்து வருகிறார். ஜக்கேஷுக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துள்ள ரங்கநாயகா திரைப்படம் மார்ச் 8-ந் தேதியான இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. முதல் படத்திலேயே நடிகை ரச்சிதா 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... விஜய் டிவியை விட்டு வெளியேற இது தான் காரணம்? சிவகார்த்திகேயன் விஷயம் முதல் பர்சனல் வரை பகிர்ந்த பாவனா!

click me!