தோழிகளுடன் பேச்சிலராக பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பிக்பாஸ் லாஸ்லியாவின் பிளெடி ஸ்வீட் போட்டோஸ்

First Published Jan 18, 2024, 2:32 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, தனது தோழிகளுடன் பேச்சிலராக பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனார். அந்த சீசனில் பங்கேற்றபோது சக போட்டியாளரான கவினை காதலித்தார் லாஸ்லியா.

கவின் - லாஸ்லியாவின் காதல் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்களது காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை உருகி உருகி காதலித்த இந்த ஜோடி, வெளியில் வந்ததும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். 

லஸ்லியாவை பிரிந்த பின்னர் மோனிகா டேவிட் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணமும் செய்துகொண்டார் கவின். ஆனால் லாஸ்லியா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். அவர் தற்போது சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்... சொன்னதை செய்த விஷ்ணு விஜய்... பிக்பாஸில் மாயா தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோ வைரல்

லாஸ்லியா ஃபிரெண்ட்ஷிப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து கூகிள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து கவர்ச்சி ரூட்டுக்கு தாவினார் லாஸ்லியா.

உடல் எடையை குறைத்ததோடு, கவர்ச்சி உடையணிந்து விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை தட்டிதூக்க பிளான் போட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகை லாஸ்லியா, தற்போது பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய பேச்சிலர் தோழிகளுடன் அவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.

பொங்கல் பண்டிகைக்கு தோழிகளுடன் ஒன்றாக உணவருந்தி, அவர்களுடன் சீட்டு விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அடுத்த ஆண்டு தல பொங்கல் கொண்டாட வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா செய்த தில்லுமுல்லு வேலை... அபிராமியிடம் வசமாக சிக்கிய தீபா - கார்த்திகை தீபம் சீரியல் டுவிஸ்ட்

click me!