‘வா தமிழா வா’ ஷோவில் இருந்து விலகிய கரு பழனியப்பன்... அவருக்கு பதிலாக களமிறங்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்

First Published Apr 5, 2024, 9:08 AM IST

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு பழனியப்பன் தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

karu palaniappan

ஸ்ரீகாந்த் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த பார்த்திபன் கனவு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் கரு பழனியப்பன். இதையடுத்து விஷால் நடித்த சிவப்பதிகாரம், சேரனின் பிரிவோம் சந்திப்போம், ஸ்ரீகாந்தின் சதுரங்கம், விமல் நடித்த ஜன்னல் ஓரம் போன்ற படங்களை இயக்கினார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும், நட்பே துணை, கள்ளன், நந்தி, டி பிளாக், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

Tamizha Tamizha show

நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கிய கரு பழனியப்பன் அடுத்ததாக தொகுப்பாளராக களமிறங்கினார். ஜீ தமிழில் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக தொடங்கப்பட்ட தமிழா தமிழா என்கிற நிகழ்ச்சியை கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொகுத்து வழங்கி வந்தார் கரு பழனியப்பன். அந்நிகழ்ச்சியை சுமார் 5 ஆண்டுகள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய அவர், கடந்த 2023-ம் ஆண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்... Rashmika : இவங்களுக்கு இதே வேலையா போச்சு... விஜய் தேவரகொண்டாவுடன் ரகசிய டேட்டிங்; வசமாக சிக்கிய ராஷ்மிகா

vaa tamizha vaa

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகியதை அடுத்து தற்போது அந்நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகிய கரு பழனியப்பன் அடுத்ததாக கலைஞர் டிவிக்கு சென்று அங்கு வா தமிழா வா என்கிற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.

Aari

வா தமிழா வா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகிய நிலையில், அந்நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அந்த நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகரும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் தான் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இந்நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அழகே அள்ளுதே! கவர்ச்சி உடையில்... கடற்கரையில் ஹாய்யான காத்து வாங்கும் அருண் விஜய்யின் அக்கா மகள் தியா!

click me!