பூர்ணிமாவை தொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் மாயா... குவியும் வாழ்த்துக்கள்

First Published Mar 15, 2024, 9:32 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட மாயா கிருஷ்ணன் தற்போது ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

Maya, Poornima

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் விக்ரம். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் ஒரே ஒரு சீனில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் மாயா கிருஷ்ணன். அப்படத்தில் அவர் விபச்சாரியாக நடித்திருந்த ஒரு சீன் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. இதையடுத்து நடிகர் விஜய்யின் லியோ படத்திலும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தலைகாட்டிச் சென்றார் மாயா.

fighter raja

சினிமாவில் விஜய், கமல் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்த மாயா, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் அதிகளவில் சர்ச்சைகளில் சிக்கிய போட்டியாளராகவும் இவர் திகழ்ந்து வந்தார். இவர் தலைமையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த புல்லி கேங்கும் சோசியல் மீடியாவில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன. இத்தனை விமர்சனங்களையும் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய மாயாவுக்கு பைனலில் மூன்றாம் இடம் கிடைத்தது.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியில் இனி வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக இவர்தான்... செம்ம செலக்‌ஷன் என பாராட்டும் ரசிகர்கள்

fighter raja Movie Pooja

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறுகிய காலத்தில் பாப்புலர் ஆவதோடு, அவர்களுக்கு பட வாய்ப்புகளும் கிடைப்பதுண்டு. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட பூர்ணிமா அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டித் தூக்கி பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது அவரது தோழியான மாயா கிருஷ்ணனும் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

fighter raja Movie Heroine Maya

அதுவும் தமிழில் அல்ல, அவர் ஹீரோயினாக நடிக்க உள்ள முதல் படம் தெலுங்கில் உருவாக உள்ளது. ஃபைட்டர் ராஜா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிருஷ்ண பிரசாத் இயக்குகிறார். ராம்ஸ் என்பவர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தான் மாயா கமிட் ஆகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இதில் மாயா கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமின்றி ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் மாயாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... டீப் நெக் ஆடையில்.. கூடுதல் கவர்ச்சியில் ஹாட் போஸ்.. பார்வையில் சொக்க வைக்கும் பூஜா ஹெக்டே - Latest Clicks!

click me!