Best Phone Under 15000 : ரூ 15,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான் !!

First Published Sep 22, 2023, 6:50 PM IST

இந்தியாவில் ரூ.15,000க்குள் இருக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை இங்கு காணலாம். பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முக்கிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Best Budget Smartphones in India

நீங்கள் தற்போது இந்தியாவில் ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களைத் தேடுகிறீர்களானால், உங்களுக்கான செய்தி தான் இது. ரூ.15,000 பட்ஜெட்டில், நல்ல டிஸ்பிளே, கேமரா, சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் நீண்ட நேரம் தாங்க கூடிய பேட்டரி போன்றவற்றை தரும் ஸ்மார்ட்போன் பட்டியலை பார்க்கலாம்.

Best 5G phones under Rs 15000

சாம்சங் கேலக்சி எம்14 (Samsung Galaxy M14 5G) 90Hz LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது. ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் Exynos 1330 செயலி மூலம் இயக்கப்படுகிறது. பெரிய 6000mAh பேட்டரி உடன் வருவதால், அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கவர்ச்சியான அம்சத்துடன் கூடிய பட்ஜெட்டுக்கு ஏற்ற 5G ஸ்மார்ட்போனைத் தேடுபவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ் ஆகும்.

Best Smartphones Under 15000

ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) மலிவு விலையில் வரும் சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். Redmi 12 5G இன் தனித்துவமான அம்சம் நிச்சயமாக, 5G ஆகும். அதுவும் அடிப்படை 4GB RAM + 128GB சேமிப்பக மாறுபாட்டிற்கு ரூ.10,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. 6 ஜிபி வேரியண்ட் நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் ரூ. 15,000க்குக் குறைவான பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் போது, 5G இணைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் நல்ல கேமரா போன்ற நல்ல அம்சங்களுடன் வருவதால் இதனை தேர்ந்தெடுக்கலாம்.

Best Phones Under Rs 15000

போக்கோ எம்6 ப்ரோ (Poco M6 Pro 5G) ஆனது Redmi 12 5G இன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும். Redmi 12 5G மற்றும் Poco M6 Pro 5G இரண்டும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளதால், நீங்கள் குறைந்த விலையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் போக்கோ மொபைலை தேர்வு செய்யலாம்.

Best Phone Under 15000

ஐக்யூ (iQOO Z6 Lite 5G) ஆனது Snapdragon 4 Gen 1 SoC சிப்செட் தடையற்ற செயல்திறன் மற்றும் திறமையான பேட்டரி பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 120Hz LCD டிஸ்ப்ளே மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற சூப்பரான அசத்தல் வசதிகளுடன் வருகிறது. மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் இது ஒரு சிறந்த தேர்வாகத் தொடர்கிறது.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

click me!