Beauty Tips : கோடையில் முகம் பொலிவாக இருக்க 'இந்த' சாக்லேட் ஃபேஸ் பேக்குகளை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

First Published Apr 9, 2024, 7:35 PM IST

கோடையில் பளபளப்பான மற்றும் அழகான சருமத்தை விரும்பினால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சாக்லெட் ஃபேஸ் பேக்குகளை முயற்சி செய்யுங்கள்.

கோடை காலம் தொடங்கிவிட்டதால், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, நம் ஆரோக்கியம் மற்றும் சருமம் பாதிக்கப்படும். குறிப்பாக, சூரியன், தூசி மற்றும் மண் நம் சருமத்தை மிகவும் பாதிக்கிறது. இதன் காரணமாக தோல் வறண்டு மந்தமான மற்றும் உயிரற்றதாக மாறும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சீசனில் சருமத்தை ஒழுங்காக பராமரிக்காவிட்டால், அது தொடர்பான பல பிரச்சனைகள் நம்மை தாக்கும்.

எனவே, இந்த கோடையில் உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்ற விரும்பினால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள, டார்க் சாக்லெட்டுடன் சில பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் தயாரிக்கவும். இந்த ஃபேஸ் பேக் உதவியுடன் பளபளப்பான சருமத்தைப் பெறுங்கள். சரி வாங்க இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

டார்க் சாக்லேட் தேன் மற்றும் இலவங்கப்பட்டை ஃபேஸ் பேக்: அரைத்து வைத்த இரண்டு டீஸ்பூன் டார்க் சாக்லேட் பவுடர் மற்றும் இலவங்கப்பட்டை தூள் எடுத்து கொள்ளுங்கள். இவற்றுடன் அரை டீஸ்பூன் தேன் கலக்கவும். இவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

டார்க் சாக்லேட் மற்றும் வாழைப்பழம் ஃபேஸ் பேக்: ஒரு பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதில் ஒரு ஸ்பூன் டார்க் சாக்லேட் பவுடரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் அவற்றை முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

டார்க் சாக்லேட் மற்றும் பிரவுன் சுகர் ஃபேஸ் பேக்: இரண்டு டீஸ்பூன் டார்க் சாக்லேட் பவுடரில், ஒரு டீஸ்பூன் பிரவுன் சர்க்கரையை நன்கு கலந்து, அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடவும். பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதையும் படிங்க:  Beauty Tips : கரும்புள்ளி மறைந்து முகம் பொலிவாக முல்தானி மெட்டியை 'இப்படி' யூஸ் பண்ணுங்க..!!

டார்க் சாக்லேட் மற்றும் காபி பவுடர் ஃபேஸ் பேக்: இரண்டு டீஸ்பூன் டார்க் சாக்லேட் பவுடரில், இரண்டு டீஸ்பூன் காபி பவுடரை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். அவை நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதையும் படிங்க: Beauty Tips : அடிக்கும் வெயிலில் முகம் பளபளக்க.. இந்த 3 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க..!

டார்க் சாக்லேட் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்: இரண்டு டீஸ்பூன் டார்க் சாக்லேட் பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு, நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

டார்க் சாக்லேட் மற்றும் கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்: சம அளவில் டார்க் சாக்லேட் பவுடர் மற்றும் கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

click me!