இனி யூடியூப்பில் யார் மனதையும் புண்படுத்துற மாதிரி கருத்துக்களை பதிவிடமாட்டேன்! நீதிபதியிடம் கதறிய சவுக்கு!

By vinoth kumar  |  First Published May 11, 2024, 6:55 AM IST

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் அதன் அடிப்படையில் அவர் தாக்கியது குறித்து விசாரணை நடைபெறும். 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் சவுக்கு சங்கர்  நீதிபதி இடம் தெரிவித்திருக்கிறார்.  


10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் சவுக்கு சங்கர்  நீதிபதி இடம் தெரிவித்திருக்கிறார்.  

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யபட்டு கோவை மத்திய சிறையில் உள்ள யுடியூப்பர் சவுக்கு சங்கர் மீது  சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி கோதண்டராஜ் முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் வழக்கு விசாரணை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு சவுக்கு சங்கர்  கோயம்புத்தூருக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Shankar : சவுக்கு சங்கர் அலுவலகத்தில் கஞ்சா பறிமுதல்.. வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் - தனிப்படை அதிரடி!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் வழக்கறிஞர் விஜயராகவன்: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் கொடுத்து சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற முதன்மை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். சவுக்கு சங்கர் யுடியூப் வாயிலாக பெண்களை கொச்சைப்படுத்தியதாக வீரலட்சுமி என்பவர் தொடர்ந்து வழக்கு உள்ளிட்ட இரண்டு வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கைது செய்ய நீதிபதி ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் அதன் அடிப்படையில் அவர் தாக்கியது குறித்து விசாரணை நடைபெறும். 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் சவுக்கு சங்கர்  நீதிபதி இடம் தெரிவித்திருக்கிறார்.  தாக்கப்பட்டது குறித்து நீதிபதி விசாரணை மேற்கொள்வதாகவும் தைரியமாக இருக்கும்படி சவுக்கு சங்கரிடம் நீதிபதி தெரிவித்ததாகவும் கூறினார். 

இனிமேல் யூடியூப்பில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கூறியதாக தெரிவித்தார். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் எனவும் நீதிபதி  முன்பு சவுக்கு சங்கர் தெரிவித்து இருக்கிறார். 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜாமீன் மனு மீதான தேதி இன்னும் குறிப்பிடாமல் உள்ளது எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: 6வது வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்.. கிளம்பாக்கம் விவகாரத்தில் அதிர்ச்சி கொடுத்த சிஎம்டிஏ

ஏற்கனவே அவரை கோயம்புத்தூர் சிறையில் கொடூரமாக தாக்கி உள்ள நிலையில் மீண்டும் அவரை அங்கே கொண்டு செல்கின்றனர் என தெரிவித்தார். சவுக்கு சங்கரை நீதிமன்றம் அழைத்து வரும்பொழுதும் செல்லும் போதும் அவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியும் கையில் துடைப்பத்தை வைத்தும் செருப்புக்களை வைத்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை வெளியே அழைத்து வரும்பொழுதும் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களும் அவரது வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர்.

click me!