Beauty Tips : உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாக இருக்க நீராவி பிடிங்க..

First Published May 8, 2024, 6:45 PM IST

உங்கள் முகத்திற்கு நீராவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
 

பெண்கள் பலர் தங்கள் முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்ற பல வழிகளை பின்பற்றுகின்றன. சிலர் விலை உயர்ந்த பொருட்களை 
பயன்படுத்துகின்றனர். நீங்கள் எப்போதாவது ஒரு க்ளீன்-அப் ஃபேஷியல் செய்திருந்தால், உங்கள் முகத்திற்கு நீராவி பிடிப்பது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 

சிலர் வீட்டிலும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள். ஆனால், முகத்தில் நீராவி பிடிப்பது சரியா தவறா என்று உங்களுக்கு தெரியுமா? முகத்திற்கு ஆவி பிடித்தால் சருமத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்..

சருமத்தை ஈரப்பதமாக்கும்: முகத்திற்கு  நீராவி எடுத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது சருமத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். நீராவி சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் சருமத்தை மென்மையாக்குகிறது.

கரும்புள்ளிகளை அகற்றும்: நீராவில் பிடிப்பது துளைகளைத் திறக்க உதவுகிறது. இதன் காரணமாக, முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் இறந்த சருமம் எளிதில் அகற்றப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஆவி பிடித்தால் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் குறைந்து, சருமம் பளபளக்கும்.

இதையும் படிங்க: ஆண், பெண்களுக்கு சூப்பர் ஐடியா..! இப்படி ஆவி பிடித்தால் முகப்பரு இரண்டே  நாளில் மறைந்து விடும்...

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் தீமை: முகத்திற்கு ஆவி பிடிப்பது சிலருக்கு தொந்தரவு தரலாம். உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், ஆவி பிடித்தால் முகத்தில் எரியும் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

இதையும் படிங்க: தண்ணீரில் இந்த 1 பொருள் போட்டு ஆவி பிடிப்பதால் முகத்தில் இத்தனை ஜொலிப்பு கிடைக்குமா? அறிவியல் உண்மை தெரியுமா?

முகத்திற்கு நீராவி எப்படி எடுப்பது?: முகத்திற்கு சூடான நீரைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், அதிக சூடான நீரை அல்ல. உங்கள் முகத்தை நீராவியில் இருந்து 10 முதல் 15 அங்குல தூரத்தில் வைத்து, 3 நிமிடங்களுக்கு மேல் நீராவி எடுக்க வேண்டாம். நீராவி எடுத்த பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். உங்கள் தோல் உணர்திறன் கொண்டதாக இருந்தால், மருத்துவரை அணுக மறக்காதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!