செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை நாளை தள்ளி வைப்பு: அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு!

Published : May 15, 2024, 11:59 AM IST
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை நாளை தள்ளி வைப்பு: அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு!

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைய தினம் தள்ளி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திமுக முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி  தனக்கு ஜாமின் கோரியும், கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல்.ஏ பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளார். எனவே வழக்கின் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

அதேசமயம், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வழக்கை மே 15ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்த நீதிபதிகள் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்ற அமலக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைய தினம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

கிரைய பத்திர நடைமுறையில் மாற்றம்: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!

மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை என்பதால், நாளைய தினம் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் அதன்பிறகு சுமார் ஒரு மாதம் வரை செந்தில் பாலாஜி காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Tamil News Live today 06 December 2025: போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்