பொங்கல் விருந்தாக தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா? என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது

First Published Jan 11, 2024, 10:28 AM IST

பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதை போல் ஓடிடியிலும் 2 புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் பட்டியலை பார்க்கலாம்.

pongal release movies

பொங்கல் பண்டிகை என்றாலே புதுப்படங்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு போட்டியாக ஓடிடியிலும் சில தமிழ் படங்கள் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அயலான்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ் பிக்சன் படமான அயலான் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் ஜனவரி 12-ந் தேதி திரை காண உள்ளது.

கேப்டன் மில்லர்

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

மிஷன்

பொங்கல் ரேஸில் கடைசியாக இணைந்த திரைப்படம் தான் மிஷன். இப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படமும் ஜனவரி 12-ல் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... வத்திக்குச்சி வனிதா பொண்ணுனா சும்மாவா! கொளுத்திப்போட்ட ஜோவிகா... பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வெடிக்கும் மோதல்?

மெரி கிறிஸ்துமஸ்

விஜய் சேதுபதி நடித்துள்ள பான் இந்தியா திரைப்படம் தான் மெரி கிறிஸ்துமஸ். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். இப்படமும் வருகிற ஜனவரி 12-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

செவப்பி

ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் செவப்பி. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பூர்ணிமாவுக்கு ஜோடியாக ரிஷிகாந்த் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 12-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

ஜர்னி

சேரன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் ஜர்னி. இந்த வெப் தொடரில் சரத்குமார், பிரசன்னா, திவ்ய பாரதி, ஆரி அர்ஜுனன், கலையரசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த வெப் தொடருக்கு சத்யா இசையமைத்து உள்ளார். வருகிற ஜனவரி 12-ந் தேதி இந்த வெப் தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

ஜோ

ரியோ ராஜ் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் ஜோ. ரொமாண்டிக் திரைப்படமான இது திரையரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தை வருகிற ஜனவரி 15-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர்.

இதையும் படியுங்கள்... மோசமடைந்த உடல்நிலை... ஒரு வாரமாக ஐசியூவில் சிகிச்சை - நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு என்ன ஆச்சு?

click me!